பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

என்ன? ஏன்? எப்படி?

கிறது. ஒரு சிலர் தலைமைப் பட்டம் கட்டிக் கொள்ளு வதைத் தவிர இவற்றினால் உருப்படியான பயன் எதுவும் இல்லை.
மக்கள் தொகை குறைந்தால் விலைவாசி இறங்குமா?
இறங்காது. விலைவாசி இறங்க ஒரேவழி நோட்டு அச்சடிப்பதை நிறுத்துவது தான்?
தமிழகம் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் சிறந்த தலைவர்களையெல்லாம் இழந்து விட்டதல்லவா?
உண்மைதான், பெருந்தலைவர்கள் பலர் வயது முதிர்ந்து இயற்கையடைந்து விட்டார்கள், இருப்பினும், நமக்கு தொடர்ந்து நம்பிக்கையூட்டக் கூடிய தலைவர் கள் இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராசர், சிலம்புச் செல்வர், கலைஞர் போன்றவர்கள் தமிழுணர்வும், நாட்டுப்பற்றும் சீர்குலையா வண்ணம் வழி நடத்திச்செல்ல இருந்து வருகிறார்கள்.
இரயில் வண்டித்துறையில் அடிக்கடி வேலை நிறுத்தம் நடப்பதால் பொதுமக்களுக்குத் துன்பமாயிருக்கிறதே?
இரயில்வே மட்டுமல்ல; இந்திய அரசின் எந்தத் துறையிலும் பணிபுரிபவர்களுக்குப் பொதுமக்கள் துள்பம் பற்றி அக்கறையில்லை. இப்பொழுது இரயில்வேக்காரர்கள் கேட்பதெல்லாம் கொடுத்தால் 400 கோடி ரூபாய் செலவாகுமாம். இந்த நானூறு கோடிக்கும் நோட்டு அச்சடித்தால் மேலும் விலைவாசி ஏறும். அரசு பணியாளர்கள் நாட்டை வரட்சி நிலைக்கு ஏற்றிக்கொண்டு போகிறார்கள்.
குன்றக்குடி அடிகளார் அரசியலில் ஈடுபடுகிறாரே. ஒரு துறவிக்கு அரசியல் தேவையா?