பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

O குன்றக்குடி அடிகளார் ஒரு துறவி என்ற முறையில் அரசியல் தேவையில்லைதான். ஆனால், சமயச் சீர் திருத்த நோக்கமுடைய துறவி தம் மடத்தோடு இருந்து விட்டால் நோக்கம் நிறைவேறாது. அரசியலுக்கு வந்தால்தான் சீர்திருத்தம் பரவ வாய்ப்புண்டு, தேவையான அளவுக்கு அரசியலில் பங்கு கொள்ளுகின்றார் குன்றக்குடியார். 
 O மணியம்மையாரின் சாதி ஒழிப்புப் போராட்டம்வெற்றி பெறுமா?
 O பெரும் வெற்றியுடன் மணியம்மையார் மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார். அமைதியாக ஒரு போராட்டத்தை எப்படி நடத்துவது என்று மற்ற அரசியல் தலைவர்கள் மணியம்மையாரிடம் பாடம் கேட்டுக் கொள்ளவேண்டும். கல், சோடா பாட்டில், கிருஷ்ணாயில் இல்லாத ஒரு கண்ணியமான போராட்டத்தை இந்த விசில் யுகத்தில் நடத்திக் காட்டியிருக் கிறார்.
 O கிராமங்களை நகரங்கள் சுரண்டி வாழ்கின்றனவா?
 O அது அந்தக் காலம், தமிழக அரசு இப்போது கிராமங்களையும் வேளாண்மைகளையுமே சிறப்பாகக் கருதிப் பணியாற்றி வருகிறது. 
 O நம் நாட்டில் அடிக்கடி போராட்டங்களும் குழப்பங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றனவே?
 O மக்கள் தன்னிறைவோடு இருந்தால் போராட்டக்காரர்களுக்கு ஆள்கிடைக்காது. இந்திரா ஆட்சியில் மக்களைச் சுரண்டும் போக்குத் தான் காணப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சம், விலைஉயர்வு எல்லாம் சேரும் போது, குழப்பவாதிகளின் கை ஓங்கிவிடுகிறது இந்நிலை தொடர்ந்தால் இராணுவத்தாலும் அடக்க முடியாத கலகங்கள் தோன்றக்கூடும்.