பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 என்ன? ஏன்? எப்படி?

 O நம் நாட்டில் அடிக்கடி கலகங்கள் நடப்பதற்குக் காரணம் என்ன?
 O அடிமைகளாக இருந்தே பழக்கப்பட்டவர்களுக்கு சுதந்திரத்தை-அதன் அமைதியை-அனுபவிக்கத் தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் கலகங்களைக் கிளப்பி விட்டுச் சுதந்திர வாழ்வைக் கெடுத்துக் கொள்ளுகிற, முட்டாள்கள் நம்நாட்டில் அதிகம் பேர் இருக்கிறார்கள்
 O தனித்தமிழ் நாடு கேட்பது தவறா?
 O இன்றைய இந்திய அரசுச் சட்டப்படி தனிநாடு கேட்பது தவறுதான்! தமிழ் மக்கள் அனைவரும் விரும்பினால், இந்தச் சட்டத்தைத் திருத்திக் கொள்ளலாம். ஆனால் யாரோ சிலர் தனித்தமிழ் நாடு கேட்கிறார்களே, அவர் கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று ஒரு தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் கேட்க, தமிழக முதல்வர், அவர்கள் குறிப்பிடத்தக்க அளவினர் அல்லர் என்று பிரதமரே கருதுவதால், நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று சொல்ல நிலைமை இப்படியிருக்கும் போது, தனித்தமிழ் நாடு கேட்பதில் பொருளேயில்லை
 O நாட்டில் நடக்கின்ற கலகங்கள் முக்கால்வாசி மாணவர்களால் தானே செய்யப்படுகின்றன.
  O ஆம். பெற்றோர்கள், சிறுவயது முதலே தங்கள் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதில்லை. ஒழுங்கு, கட்டுப்பாடு,பணிவு என்பவற்றை மாணவர்களிடம் காண முடியாமைக்கு இதுவே காரணம். யாரும் வளர்க்காமல் தாமாக வளர்ந்தவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதற்கு இன்றைய மாணவர்களிற் பலர் எடுத்துக்காட்டாப் விளங்குகிறார்கள்.