பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் 23

 O உணவுக்காகப் போராடுபவர்களைச் சுட்டுத் தள்ளலாமா?
 O உணவுக்காகப் போராடுபவர்கள், உணவுப் பொருள் கிடங்குகளுக்குச் சென்று, கைப்பற்றி நியாய விலைக்கு வழங்கினால், அது சத்தியப் போராட்டம் ஆகும். பொது நிறுவனங்களையும், புகை வண்டி நிலையங்களையும் கொளுத்துவார்களேயானால், அவர்களைச் சுட்டு விரட்டா விட்டால் கலகம்தான்.வளரும்.
O வேலை நிறுத்தம். தேசத்துரோகம் என்பது உண்மையா
 O ஆம்! வேலை நிறுத்தம் தேசத் துரோகமே! வேலை நிறுத்தங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தாங்கள் செய்யாத ஒரு குற்றத்துக்கு மக்கள் பழிவாங்கப்படும் மோசடி, வேலை நிறுத்தத்தால் விளைகிறது. பொது மக்கள் தாங்கள் கட்டவேண்டிய வரிகளை ஒழுங்காகக் கட்டுகிறார்கள். கட்டணம் செலுத்திய பிறகே வண்டியில் ஏறுகிறார்கள். வறுமையினால் தப்பித்தவறி வரிகட்டமுடியாமலிருந்தால் தண்டம் கொடுக்கிறார்கள். எவ்வகையிலும் எல்லா வரிகளும் பொது மக்க்ளிடம் தவறாமல் வசூலிக்கப்பட்டு விடு கின்றன. அவர்களுக்குரிய பயன்களை-உரிய நேரத்தில் கிடைக்காமல் தடுப்பதோடு பல இன்னல்களையும் துயரங்களையும் இவ்வேலை நிறுத்தங்கள் விளைவிக்கின்றன. பணியாளர்கள் பொது மக்களுக்குத் துன்பந்தராத வகையில் திட்டமிட்டுத் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். நிர்வாகத்தை எதிர்த்துப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால், துன்பம் அனுபவிப்பது நிர்வாகமல்ல, பொதுமக்களே! ஆகையால் வேலைநிறுத்தங்கள் தேசத் துரோகமான செயலாகும்.