பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•

என்ன? ஏன்? எப்படி?

அரசியல் போராட்டங்களால் பல சாவுகள் ஏற்படுகின்ற னவே! இதற்கு யார் பொறுப்பு? போராட்டச் சாவுகளுக்கு இப்போது யாருமே பொறுப்

பேற்பதில்லை காலிகள் செயல் என்று கூறித் தப்பித்துக்

கொள்கிறார்கள். போராட்டங்களை நடத்துகின்ற

தலைவர்கள் அமைதியாக நடத்த ஆண்மையிருந்தால் நடத்தவேண்டும். அவ்வாறு அமைதியாக ஒரு போராட்

-ம் நடத்தாவிட்டால், அதனால், ஏற்படும் பொருட்

சேதங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் போராட்டத்தைத்

துரண்டும் தலைவரே, பொறுப்பு என்ற சட்டம் இருக்க வேண்டும் ஒரு போராட்ட்த்தில் ஒரு கொலை விழுந் தால், கொலைக் குற்றத்தின் பேரில் அதைத் துண்டிய தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி ஒரு முறையிருந்தால், பொறுப்பற்ற போராட்டங் களைத் தவிர்ககமுடியும். பாமர மக்களுக்கு வாக்குரிமை யிருப்பதை விடப் படித்த வர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று இருந்தால், சரியான ஆட்களைத் தேர்ந்தெடுக்க முடியுமல்லமா? படித்தவர்கன் மட்டுமே வாக்களிப்பதென்று நடை முறைக்கு வந்தால், பாமர மக்களுக்கு அரசியல் உரிமை மறுக்கப்படும் குற்றம் ஏற்படும். படித்தவர்கள் மட்டும் சரியான ஆட்களைத் தெரிந்து தேர்ந்தெடுத்துவிடும் திறமையுள்ளவர்கள் என்பதை ஒப்க்கொள்ளமுடியாது. அதுபோல் பாமரர்களுக்கு அந்தத் திறமையில்லை என் பதையும் ஒப்புக்கொள்ள முடியாது.

தமது பாரதம் இப்போது எப்படியிருக்கிறது?

மக்களாட்சியின் தன்மைகளைத் துய்ப்பதற்குப் பதிலாக அதன் தீமைகள்ை வளர்த்து கொண்டிருக்கிறோம்.

குருட்டுத்தனமான வாக்குச் சாவடித் தேர்தல்களை