பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசிரயல்

.

27

வார்கள். பணிவில்லாத அதிகாரிகள் பதவியில் இருக்க

முடியாது என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது.

காந்தியடிகளின் கொள்கைகள், இந்த விஞ்ஞான காலத்துக்கு ஏற்றவை தானா? காந்தியடிகள் குடிசைத் தொழில்கள் வளரவேண்டும்

என்றார். அது பத்தாம் பசலித் தனமான கொள்கை

என்று நினைத்த காங்கிரசார் இந்தியாவில் இயந்திரத் தொழிலை வளர்த்தனர். வேலையில்லாத் திண்டாட் டத்தை இன்று நாம் அனுபவிக்கிறோம். காந்தியடிகள் சத்தியமே காப்பற்றும் என்றார். அரசியல் வாதிகள் புரட்டை நம்பி இன்று மந்திரிசபைகளைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடிகள் அஹிம்சையை உப தேசித்தார். அதை மறுத்தவர்கள் இன்று அடிதடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். காந்தியடிகள் காலத்தையும், மக்கள் தொகையையும், நம் பண் பாட்டையும் சிந்தித்து நமக்கேற்ற திட்டங்களை வகுத்தார். அவருடைய சீடர்கள் விஞ்ஞானத்தையும் முன்னேறிய ஞானத்தையும், முன்னேறிய நாடுகளை யும், ஆடம்பரத்தையும் விரும்பி அழிவுப் பாதையில் நாட்டைச் செலுத்துகிறார்கள்.

இந்தியா முழுவதற்கும் ஒரே அரசு இருந்தால் என்ன? மாநிலங்களுக்குத் தனி அரசு தேவையா? இது சர்வாதிகாரச் சிந்தனை.

சிவசேனை. தமிழர்களை ஏன் தாக்குகிறது?

தங்கள் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் யாரும் வந்து பிழைக்கக் கூடாது என்கிறது சிவசேனை. இதற்கு அங் குள்ள எல்லாக் கட்சிகளுமே மறைமுக ஆதரவு கொடுக் கின்றன. வெளிநர்டுகளுக்குப் பிழைக்கப் போன