பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

‘O

என்ன? ஏன்? எப்படி

தமிழர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்; வெளிமாநிலத் திற்குப் போனவர்கள் கொள்ளையடிக்கப் படுகிறார்கள்.

மஞ்சள் பத்திரிகைகளைத் தடை செய்யக் கூடாதா? பத்திரிகைச் சுதந்திரத்தை இந்த அரசு பறிக்க விரும்ப வில்லை என்று கலைஞர் கூறியிருக்கிறார். கருத்தைக் கூறுவதற்குச் சுதந்திரம் வேண்டியதுதான். திரித்துக் கூறுவதற்கோ, ஆபாசச் செய்திகள் வெளியிடுவதற்கோ பத்திரிகைச் சுதந்திரம் என்ற பெயரால் அனுமதிப்பது விரும்பத்தக்கதல்ல. -

கேரள அசெம்பிளியில் எதிர்க்கட்சியினர் கவர்னரை கேரோ செய்திருக்கிறார்கள்...? சட்டசபை உறுப்பினர்கள், மக்கள் சார்பாகத் தேர்ந் தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் நாட்டு நலங் காப்பதோடு நாட்டுப் பண்பும் காக்க வேண்டிய கடமையுடையவர்கள், பண்பு மீறி நடப்பவர் கள் நாட்டு நலங் காப்பார்கள் என்று எண்ண முடியாது. கேரோ செய்வது புதுமையாகவோ புரட்சியாகவோ கருதப்படலாம்; பண்பாகவோ ஒழுக்கமாகவோ கருதப் ، التي T لنا إياها) ـاله

டில்லி அரசு விலைகளை மேலும் மேலும் ஏற்றிக் கொண்டேயிருக்கிறதே! வெளிநாட்டுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப் படுத்துவது டில்லி அரசின் கையில் இல்லை. உள்நாட்டுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வழிதெரி யாமல் டில்லி அரசு விழிக்கிறது. வரி உயர்வை மக்கள் தாங்கும் சக்தியுள்ளவரை தாங்கிக் கொள்வார்கள். தாங்கமுடியாத நிலைவரும் போது, நாடு கொள்ண்க் காடாகி விடும்.