பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் - - 29.

O

இலவசக் கல்வித் திட்டத்தால்தான் மாணவர்கள் பொறுப்பற்று நடக்கிறார்கள் இல்லையா? இலவசக் கல்வித் திட்டத்தை அரை குறையாகச் செயற் படுத்துவதால் வந்த வின்ன இது. இலவசக் கல்வித் திட்டம் கட்டாயக் கல்வித் திட்டமாகவும் வரவேண்டும். சிறுவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சட்டம் இருப்பது போல, பள்ளியிறுதி வகுப்பு வரை படித்துத் தேறாதவர்களை எந்த வேலையிலும் சேர்க்கக் கூடாதென்ற சட்டம் இருக்க வேண்டும். அப். பொழுது கட்டாயப் படிப்பு பொறுப்புள்ள படிப்பாகவும் வெற்றி பெறும்.

குஜராத்தில் கடைகளை உடைத்துக் கொள்ளையடித். திருக்கிறார்களே இதனால் பஞ்சம் போய்விடுமா? உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால், ஆட்சியில் இருப் பவர்கள், பஞ்சம் ஏற்படாதவாறு தடுத்து நிறுத்த நட வடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். டில்லி அரசு பிற மாநிலங்களிலிருந்து உணவுப் பொருள்களை வர வழைத்துக் கொடுத்திருக்கவேண்டும். பதுக்கல் மொருள் களைப் பறிமுதல் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் அரசு முன் கூட்டிச் செய்திருந்தால் ராணுவம் வர வேண்டிய நில்ைமை ஏற்பட்டிருக்காது.

மாநில சுயாட்சி வேண்டும் என்று கேட்கிறார்களே இதை யார் கொடுப்பது?

மாநில சுயாட்சியைக் கொடுப்பது தனிப்பட்ட மனிதர் எவருமல்லர். இந்தியப் பாராளுமன்றத்தில் மாநில

சுயாட்சித் திட்டங்கள் சட்டமாக்கப் பெற வேண்டும்.

சட்டம் நிறைவேறி விட்டால், மாநில சுயாட்சி வந்து, விடும்.