பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரசியல் 31

©

O

wO

கருப்புப் பணம் என்றால் என்ன? அரசுக்கு வரிகட்டாமல் மோசடி செய்வதற்காக தொழி லதிபர்கள் மறைத்து வைக்கும் பணமே கருப்புப் பணம்

என்று அழைக்கப்படுகிறது. இப்படி மறைத்து வைக்கும்

பணம் கோடிக்கணக்கில் இருக்கிறதாம். இப்பணம் தாட்டில் புழங்காமல் முடங்கிக் கிடப்பதால், எத் தனையோ உற்பத்தித் திட்டங்களுக்கு உதவக் கூடிய பெரும் பணம் பயனற்றுக் கிடைக்கிறது.

மாநிலத்தார்க்கே வேலை என்பது குறுகிய நோக்கம் அல்லவா?

வேலையில்லாத் திண்டாட்டம் எங்கும் பரவிக் கிடக் கிறது. சொந்த மாநிலத்தவர்கள் வேலையல்லாமல் இருக்கும் போது, அந்த மாநிலத்தில் பிற மாநிலத் தவர்க்கு வேலை வாய்ப்புக் கொடுத்தால், இருப்பவர் களுக்கு ஆத்திரம் வருவது இயற்கையே. வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கும் வரை இந்த வேற்றுமையுணர்வு

களைத் தவிர்க்க முடியாது. -

நீதிபதிகள் தண்டிக்கப்படுவதுண்டா?

உண்டு. கடவுள் சிலைகளைக் கள்ளக்கடத்தல் செய்த

தற்காக ஒரு மாஜிஸ்டிரேட் சில காங்கிரசுக்காரர்களைத் தண்டித்தார். தண்டிக்கப்பட்டவர்கள் காங்கிரசுக் காரர் களாயிருந்த காரணத்தால் மாஜிஸ்டிரேட் பதவியி லிருந்து இறக்கப்பட்டார். இது பீகாரில் நடந்திருக்கிறது

பெகியார் தோன்றியிராவிட்டால்...?

சுதந்திர பாரதத்தில் நாம் நந்தனார்களாய் நடமாடிக் கொண்டிருப்போம்.

கல்லூரி மாணவர்கன் வயது வந்தவர்கன். அவர்களுக்கு அரசியலில் ஈடுபட உரிமை உண்டல்லவா?