பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

என்ன? ஏன்? எப்படி?

உரிமைகளைப் பயன்படுத்துவதற்கும் ஓர் ஒழுங்கு வேண்டும். மாணவர்களுக்குப் படிக்கும் கடமையொன்று இருக்கிறது. அந்தக் கடமை முடியும் வரை அவர்கள் அரசியலில் ஈடுபடாமல் இருப்பது அவர்களுக்கும். தன்மை, நாட்டுக்கும் நன்மை.

ஒரு சமூகம் அதிக பிள்ளைகளைப் பெறுவ்தால் பெரும் பான்மை நிலையை யடைய முடியுமா? பெற்ற பிள்னைகளைப் பசி பட்டினியில்லாமல் காப் பாற்ற முடிந்தால், அதே சமயம் மற்ற சமூகங்களும் கணிசமான அளவுக்கு குறைந்து போயிருந்தால், அதிக பிள்ளைகளைப் பெறும் சமூகம் பெரும்பான்மையாகக் கூடும்.

இந்திப் போராட்ட வீரர்களுக்கு அரசாங்கப் பணத்தில் உதவிப் பணம் கொடுப்பது பொருந்துமா?

நாட்டு விடுதலைக்குப் போராடிய தியாகிகளுக்கு உதவிப் பணம் கொடுக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பது போல, தாய்மொழியைக் காக்கப் போராடிய வீரர் களுக்கு உதவிப்பணம் கொடுக்கவும் கடமைப்பட்டிருக் கிறது. தாய்நாட்டைக் காப்பதும் தாய்மொழியைக் காப்பதும் ஒரே மாதிரியான நாட்டுத் தொண்டேயாகும். இதை வேறுபடுத்திப் பேசுவோர் நச்சுப் பூச்சிகளேயாம்.

முறையான தமிழ் நாட்டு வரலாறு இருக்கிறதா? இந்திய வரலாறு எழுதப் புகுந்தவர்கள், டில்லியையே மையமாக வைத்து எழுதி விட்டதால் தமிழக வரலாறு கவனிப்பாரில்லாமல் போய்விட்டது. வரலாறு படித்த, தமிழ் மாணவர்கள் இத்துறையில் சிந்தனை செலுத்தி யிருந்தால் தொகுப்பான ஒரு வரலாற்றை உருவாக்கி யிருக்கலாம். இதுவரை அப்படி யாரும் செய்ய் முனைய வில்லை.