பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 35

Ο

அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் தங்கள் வாரிசு களுக்கு அதே துறையில் பணி வாய்ப்பு வேண்டும் என்கி றார்களே! இவர்கள் கூட்டுத் தன்னலவாதிகள். பணிவாய்ப்பே கிடையாமல் அல்லல்படும் பலகோடி மக்களைப் பற்றிக் கவலைப் படாமல், தங்கள் வாரிசுகளைப் பற்றி மட்டும் கவலைப்படும் இவர்கள், பேசுவது சோஷலிசம், பெற நினைப்பது தனி நல விசம்!

போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் நடைபெறும் போதெல்லாம் நாசவேலைகள் நடைபெறுகின்றனவே? நம் நாட்டு அரசியல்வாதிகள் இன்னும் காட்டுமிராண்டி மனம் படைத்தவர்களாயிருப்பது தான் நாச வேலைக்குக் காரணம். நாகரிக மனப்பான்மையுள்ள அரசியல் வாதியைக் காண்பது அரிதாயிருக்கின்றது.

நம் நாட்டில் எப்போது சமத்துவம் வரும்?

ஒரு சர்வாதிகாரி தோன்றி, திருமணம் செய்யும் எந்த ஆணும், தன் சாதியைச் சேராத வேறொரு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத்தான் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு கட்டாயச் சட்டம் கொண்டு வந்து, அதைத் திட்ட வட்டமாக அமுல் செய்யத் தொடங்கினால் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நாம்

சமத்துவத்தைப் பார்க்கலாம்.

அணுக்குண்டு இருந்தால் அந்த நாடு வல்லரசாகி விட

முடியுமா? முடியாது. பொருளாதார நிலையிலும், அது அசைக்க முடியாத வசதியுடையதாக இருக்க வேண்டும். - தமிழ் நாட்டில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பு என்ற சட்டம் எப்போது அமுலுக்கு வரும்?