பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

என்ன? ஏன்? எப்படி?

வரிகள் கூடிக் கொண்டே போனால் என்ன ஆகும்?

நோட்டில் இடம் தீர்ந்து போகும். நாட்டில் வாழ்வு

தீர்ந்து போகும்.

சீனாவில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வெற்றி பெற்றிருப் பதாகச் சொல்கிறார்களே? - அங்கு திட்டத்துக்காக ஒதுக்கப்படும் பணம் முழுவதும் திட்டச் செலவுகளுக்கே பயன்படுகிறது. நம் நாட்டில் பகுதிக்குமேல் இடைவழியில் கொள்ளை போகிறது. நம் தோல்விக்கு இதுதான் காரணம்.

கடத்தல் காரர்களுக்கு சிறைச்சாலைகளில் எல்லா வசதி களும் செய்து கொடுக்கப் படுகிறதாமே? அரசு அவ்வாறு செய்து கொடுக்கும்படி கட்டளையிட

வில்லை. ஒரு கடத்தல்காரன் மருத்துவமனையில்

இருக்கும்போது அங்குள்ள வேலைக்காரர்களுக்கெல்லாம் அயல்நாட்டு வானொலிப் பெட்டிகளை இலவசமாகக்

கொடுத்தானாம். அவன் வசதிகளை யடையும் வழி.இது தான்.

கடத்தல் காரர்களைப் பற்றி நாள்தோறும் புதுப்புதுச் செய்திகள் வ்ெளிவருகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கின்றனவே? உண்மை ஒன்றுதான் ஒரே மாதிரியாக இருக்கும். கற்பனைகள் ஆளுக்கு ஆள் வேற்றுமைப்படும். கடத்தல் காரர்களைப் பற்றி வெளிவரும் செய்திகளில், எழுது பவர்களின் கற்பனைகளும் கலக்கின்றன.

தவறு செய்யாத மனிதர் யார்?

சில கட்சித் தலைவர்கள் தவறு செய்வதேயில்லை. அவர் கள் செய்வதெல்லாம் சரியென்று. அவர்கள் கூட இருப்