பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 43

யிருப்பார்கள். ஆகவே, பாதுகாப்பைக் காவல் துறையிடம் விட்டு விட்டு, தனி மனிதர்கள் அறிவையே பாதுகாப்பு ஆயுதமாகக் கொண்டு நடமாடலாம்.

0 தொழில்களை அரசுடைமையாக்குவது பற்றித் தங்கள்

கருத்தென்ன? -

O கொள்கை என்ற முறையில், நாட்டுக்கு அதைவிடச் சிறந்த நம்மை வேறு கிடையாது. நடைமுறையில், நம் இந்திய அரசு நாட்டுடைமையாக்கிய தொழில்கள் முழுவதும், மக்கள் நன்மைக்கு இடையூறாகவே வளர்ந் துள்ளது. நமது அரசின் நாட்டுடைமைக் கொள்கை திட்டமிட்ட கொள்கையாக இ ல் லா ம ல் கண் துடைப்பாக இருப்பதே இதற்குக் காரணமாகும். ஆட்சி யில் இருப்பவர்களுக்குப் பொது உடைமைக் கொள்கை யில் ஈடுபாடு கிடையாது என்பதையும், பொதுவுடைமை யைக் காட்டித்தான் மக்களை ஏமாற்ற முடியும் என்று கருதுவதையும்தான் இவை எடுத்துக் காட்டு கின்றன. நாட்டுடைமை என்பது சட்டப் பூர்வமாகப் பண முதலைகள் அடித்த கொள்ளையை மாற்றி இன்று அதிகார வர்க்க முதலைகள் மறைமுகமாகக் கொள்ளை யடிப்பதற்காகவே செய்து கொண்ட ஏற்பாடாகத் தோன்றுகிறது.

0 இந்த நாட்டுக்குப் படித்தவர்களால் நன்மை ஏற்பட்டிருக்

கிறதா?

0 இல்லை: பெரும்பாலும் படிக்காதவர்களாலேயே இந்த நாடு நன்மைகளை அடைந்திருக்கிறது. படிப்புக்கூட, படிக்காதவர்களால்தான் வளர்க்கப்பட்டிருக்கிறது.

e கடத்தல்காரர்கள் பல அறச்செயல்கள் செய்திருக்கிறார்

களே? இது சிறப்பில்லையா?