பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம்

) கண்டவர் விண்டிலர்: விண்டவர் கண்டிலர் என்பதன்

Ο

பொருள் என்ன? விவேகானந்தர் எதிர்ப்பட்ட துறவிகளையும், பெரியோர் களையும், கடவுளை எனக்குக் காட்டுவீரா? என்று கேட்டுக் கொண்டே போனார். யாரும் காட்டவில்லை. கடைசியில் இராமகிருஷ்ண பரம அம்சரைக் கண்டு, இக்கேள்வியைக் கேட்டார். அதற்குப் பிறகு அவர் இக் கேள்வியைக் கேட்கவேயில்லை. அவர் விவேகானந் தருக்குக் கடவுளைக் காட்டினாரா? காட்டவில்லையா? அவர் காட்டியிருந்தால் அந்தக் கடவுள் எப்படியிருந்தார் என்பதையெல்லாம் விவேகானந்தர் யாரு க் கு ம் சொல்லவே இல்லை.

மனிதன் ஏழு பிறப்புப் பிறப்பான் என்பது உண்மையா?

ஐநூறு ஆண்டுகள் சாகாமல் வாழ்ந்திருந்து ஆராய்ச்சி செய்துதான் இந்த உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். தமிழ் நூல்களில் பிறப்பு என்று வருவது தலைமுறையைக் குறிக்கும். ஏழு தலைமுறைக்காவது ஒருவன் நல்ல பரம்பரியம் உண்டாகும்படி குழந்தை களைப் பெற்று வளர்க்க வேண்டும். மறுபிறவி என்பது பித்தலாட்டம்.