பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•

என்ன? ஏன்? எப்படி?

பெண்கள் குழந்தை வேண்டும் என்று அரசமரத்தைச் சுற்றுகிறார்கள்? குழந்தை வேண்டாம் என்பவர்கள் எந்த மரத்தைச் சுற்ற வேண்டும்? அவர்கள் எந்த மரத்தையும் சுற்றக் கூடாது. தன் கணவனையும் சுற்றக் கூடாது. சுற்றாமல் இருக்க முடியாது என்பவர்கள் க ரு த் த ைட செய்து கொள்ளலாம்.

வீரபத்திர சாமியார் நரபலி கொடுத்தது மூட நம்பிக் கையா? கொலைக் குற்றமா? மூட நம்பிக்கையால் ஏற்பட்ட கொலைக் குற்றம். தெய் வங்களுக்கு நேர்ந்து கொண்டு காணிக்கை செலுத்து பவர்கள் சிந்திக்கவேண்டும். ப ண த் ைத யோ பொருளையோ காணிக்கை செலுத்துவது உடைமையை இழக்கும் குற்றமாகும். நரபலி கொடுப்பது கொலைக் குற்றமாகும்.

எல்லாத் தெய்வங்களுக்கும் கோயில் இருக்கிறது. ஆனால் பிரமனுக்கு மட்டும் இல்லையே. ஏன்? பிரமன்தான் உண்மையான கடவுள். அதனால் அவன் கோயிலில் இருக்கவில்லை. எங்கும் நிறைந்தவனுக்கு கோயில் எதற்கு?

இறந்தவர்கள் பேசுவதுண்டா?

இறந்து போன மறைமலையடிகள், திரு வி. க. திருவரங் கம் பிள்ளை முதலியவர்கள், ஒரு மீடியம் வழியாகப் பேசுவதாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைவர் திரு. வ. சுப்பையா பிள்ளை சொல்லுகிறார். இதை மாண்புமிகு சி. சுப்பிரமணியம், பக்தவச்சலம் போன்றவர்கள் நம்புவதாகவும் தெரிகிறது. திரு. சுப்பையாபிள்ளையின் கூற்றை ஒப்புக் கொண்டால்,