பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 47

மீடியம் வழியாகப் பேசுகின்ற பெரியவர்கள் இன்னும் சிவத்தோடு சிவமாகக் கலக்காமல், ஆவிவடிவிலேயே உலவிக் கொண்டிருப்பதாக எண்ண வேண்டிய பிழை யுண்டாகும். சிவ ஜோதியில் கலந்தவர்கள், தத்தம் தனிக் குணங்களை விட்டு குணமிலாப் பெருமானின் இயல்புகளைப் பெற்றுவிடுகிறார்கள் என்பது நமது சைவக் கோட்பாடு ஆகும்.

0 சிவாஜி கணேசன் இயற்கையான, நடிகரர்?

O இல்லை. இயற்கையாக நடித்தால் மக்கள் மதிக்க மாட்டார்கள். எதையும் மிகைப்படுத்திக் காட்டுவதே கலை. நாட்டின் நீர்வளத்தைப் பாடவந்த ஒரு கவிஞர் குளத்தில் உள்ள மீன் துள்ளிப் பாய்ந்ததால் மரத்தில் உள்ள தேன்கூடு உடைந்து தேன் வழிந்தது என்று பாடுகிறார். ஒவ்வொரு கலையிலும் மிகைபாடு இருக்க வேண்டும். அதுவும் ஒர் எல்லையை மீறிப் போகக்

கூடாது.

0 இந்து மதத்தைச் சீர்திருத்த வருகிறவர்கள் மற்ற மதங் களிலுள்ள முடத்தனத்தைக் கண்டிப்பதில்லையே ஏன்? பயம்தானே?

O ஆம். பயம்தான் நமக்குள்ளே நாம் கண்டிக்கலாம்; தண்டிக்கலாம். பிறரைக் கண்டிக்கப் புகுந்தால், அது மதக்கலகமாக மாறிவிடுமே. நம்மைப் போல, அந்தந்த மதத்தில் பல சீர்திருத்தவாதிகள் தோன்றி பிரசாரம் செய்துவருகிறார்களே! நாம் ஏன் வீண் கலகத்தை வளர்க்க முனைய வேண்டும்?

e குடும்பக் கட்டுப்பாடு தெய்வ விரோதமான குற்றம்

என்று சொல்லுகிறார்களே?

o அரைகுறைகள், சமய அறிவு இல்லாதவர்கள்! பிறவி ஒரு துன்பம் என்பது ஞானிகள் கருத்தி, அப்பிறவித்