பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

என்ன? ஏன்? எப்படி:

துன்பத்தை அடையாமல் பல உயிர்களைக் காப்பது குடும்பக்கட்டுப்பாடு. பட்டினத்தார் பாடல்: இருப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னைக் கருப்பையூர் வாராமற்:கா. மீண்டும் கருப்பையில் பிறந்து துன்பம் அனுபவிக்காமல் காப்பாற்றுக சிவபெருமானே என்பது இதன் கருத்து.

உலகில் உள்ள தீமைகளை ஒழிக்க யாராவது ஒரு மகான் பிறப்பாரா?

தீயவர்களை ஒழித்து நல்லவர்களைக் காப்பாற்ற ஆண்டவன் ஒன்பது அவதாரங்களை எடுத்திருக்கிறார். திருத்துதர்கள் பலரை யனுப்பிப் பார்த்து விட்டார்.

மகான்களும் தோன்றி மறைந்து விட்டார்கள். தீமை

களும் குறையவில்லை; தேவதேவனின் முயற்சியும் ஒயவில்லை.

நான் எவ்வளவோ வேண்டிக்கொண்டும், கடவுள் நான் கேட்டதை அருள்புரியவில்லையே? கடவுளின் அருள் காலங்கடந்தே கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுப்வம். கடவுளை வேண்டிக்கொண்டு அவசரப்படக்கூடாது. பொறுமை வேண்டும்.

மதக் கலகங்கள் ஏன் உண்டாகின்றன? ஞானியர் மதங்களை உண்டாக்கினார்கள் அஞ்ஞானிகள் அவற்றைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால், வெறிமிகுந்து மதக் கலகங்கள் உண்டாகின்றன. மதங் களைக் காக்கும் பொறுப்பும் ஞானிகளின் கையிலேயே யிருந்திருந்தால், கலகங்கள் தோன்றியிரா.

கடவுள் உண்டு என்பதைச் சரியான எடுத்துக் காட்டுடன் விளக்க முடியுமா?