பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 49

O கணிதத்தில் முட்டை வடிவத்தை நாம் ஒன்றுமில்லை என்பதற்கு அடையாளமாகப் போடுகிறோம். அதே முட்டை வடிவம், பிற எண்களுடன் கூடும்போது ஆயிரம் பல்கோடி மதிப்பைப் பெறுகிறது. அதுபோல், காண் பதற்கு ஒன்றுமில்லாததுபோல் தோன்றும் கடவுள் அண்டங்கள் பலவற்றையும் இயக்கும் பேராற்றல் படைத்தவராயிருக்கிறார்.

e சந்திரகிராணம் பார் சாணியைப் பிடிச்சுப் பார் என்று பெரியவர் ஒருவர் கூறினார். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

O கடவுள் உண்மையை விளக்குவதற்காகக் கூறப்படும் வாசகம் இது. இதன் விரிவான பொருள், அவ்வப்போது சந்திரனைப் பாம்பு தீண்டும் செயல் கடவுள் சக்தியைக் காட்டுவதாயிருக்கிறது. சாணியில் சாதாரணமாகப் புழுப் புழுத்துவிடும். பிள்ளையாராகப் பிடித்து வ்ைத்த சாணியில் புழுப் புழுப்பது கிடையாது. இதனால் சாணியையே கடவுளாக உருவாக்கும் போது அது புழுப்பதில்லை என்பது தெரிகிறது. இக்கருத்திலேயே, நம்பெரியவர்கள் இவ்வாசகத்தைக் கூறுகிறார்கள் ஆனால் கடவுள் உண்மையை விளக்க இது இப்போது சரியான கருத்தாகாது. சூரியன் பூமி சந்திரன் ஒரே நேர்க் கோட்டில் வரும்போது பூமியின் நிழல் படிவதே சந்திர கிரணம் என்பது தெளிந்த உண்மை. சாணியில் நீண்ட நாள் ஈரம் இருந்தால் புழுப்புழுக்கும். சிறிய அளவில் பிடித்து வைக்கும் பிள்ளையார் விரைவில் காய்ந்து வறண்டு போவதால், புழுப் புழுப்பதில்லை.

e கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக்காணோம் என்பதன் பொருள் என்ன? அ- 4