பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிமயம் $1.

O Ο

s

பாவிகளைக் கரையேற்றுவதென்றால் என்ன பொருள்? அவர்கள் மீண்டும் பாவம் செய்யாதபடி செய்வதே கரையேற்றுவதாகும்.

கடவுள் நம்பிக்கையில் நல்ல நம்பிக்கை என்பது என்ன? மூடநம்பிக்கை என்பது என்ன? ஒரு கடவுள் உண்டென்றும், அக்கடவுளே உலகத்தை இயக்குகிறார் என்றும், அவரைப் பணிவதால் எக்கேடும் இன்றி வாழ அவர் அருள் புரிவார் என்றும் இவ்வுலக மக்கட்கெல்லாம் அவர் பேரொளியாய் இலங்குகின்றார் என்றும் நம்புவது நல்ல நம்பிக்கை. அக்கடவுள் பிறப் பெடுத்தாரென்றும், திருவிளையாடல் புரிந்தார் என்றும், குடித்தனம் நடத்தினாரென்றும், அறப் புறம் பான செயல்கள் புரிந்தாரென்றும் நம்புவது மூடநம் பிக்கையாகும். -

ஈ.வே.ரா. மக்களிடையே ஒழுக்கத்தை வற்புறுத்த வில்லை என்று குமுதம் கூறுகிறதே? மக்கள் வணங்கும் தெய்வங்கள் ஒழுக்கம் உடையனவாய் இருக்கவேண்டும் என்றார் பெரியார். இதன் பொருன் என்ன? ஒழுக்கமுள்ள தெய்வத்தை வணங்கும் மக்களுக்கு ஒழுக்க உணர்வு ஏற்படும். என்பதுதானே! குறுகிய மதி படைத்த குமுதம் குட்டையைக் குழப்புகிறது. இந்து மதம் அர்த்தமுள்ளதா? இந்துமதம் அர்த்தமுள்ளதாக இருந்திருந்தால் மகா வீரரும் புத்தரும் தோன்றியிருக்கமாட்டார்கள். சோதிடம் பார்ப்பதைப் பற்றித் தாங்கள் என்ன நினைக் கிறீர்கள்? நபிகள் நாயகம் சோதிடம் பார்ப்பது இறைநெறிக்குப் புறம்பானது என்று கூறியிருக்கிறார்கள். புத்த