பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

என்ன? ஏன்? எப்படி?.

பெருமான் சோதிடம் பார்ப்பதைக் கண்டித்திருக்கிறார்.

சோதிடத்தை நம்பினால் தலைவிதியை நம்பமுடியாது. தலைவிதியை நம்பினால் சோதிடத்தை நம்பமுடியாது என்று இரண்டு மூடக்கொள்கைகளின் முரண்பட்ட போக்கைப் பெரியார் விளக்கியிருக்கிறார். இப்போது நீங்களும் நான் நினைப்பது போல் தான் நினைப்பதாகக் கருதுகிறேன்.

நாத்திகம் பரவினால் உலகம் அழிந்துவிடும் என்று

சொல்லுகிறார்களே! வேதங்களில் கடவுள் அப்படிச் சொல்லவில்லை. தீமை கள் மிகும்போதுதான் உலகத்தை அழிப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.

மதங்களை உண்டாக்கியது யார்? கடவுளா? மக்களா?

கடவுள் பெயரால் சில மனிதத் தலைவர்கள் மதங்களை

உண்டாக்கினார்கள். இந்த மதவாதிகள், ஒருவரோ

டொருவர் முட்டிக் கொள்வதைப் பார்த்துக் கடவுள் கண்ணிர் விட்டுக் கொண்டிருக்கிறார்.

பெரியவர்கள் பின்பற்றும் சில பழக்கவழக்கங்களை இன்றைய இளைஞர்கள் மூட நம்பிக்கை என்று பழிக் கிறார்களே, இது பொருந்துமா? கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு பழக்க வழக்கம் என்பதற்காகவே பின்பற்றுவது மூடத்தனந்

தானே? அதை மூட நம்பிக்கை என்பது ஏன் பொருந்

தாது

தமிழ்நாட்டில் மதவெறி தலைவிரித்தாடுகிறது என் பதற்குச் சான்று காட்ட முடியுமா?

மதக் கலகங்களைத் துரண்டிவிட ஒரு கும்பல் எப்போதும் வேலை செய்து கொண்டேயிருக்கிறது. ஆனால்,