பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 55

பாவத்தைச் செய்து விட்டு பரிகாரம் செய்தால் போதும் என்று துணிந்து பாவச்செயல்களில் ஈடுபடுகின்றனர்" பொக்கமிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தமை நாணியே என்பது தேவாரம்.

அக்கினிக் குண்டத்தில் இறங்குதல் தந்தை பெரியார் கருத்துப்படி எப்படி? நாத்திகராகிய பெரியார் கருத்துப்படி பித்தலாட்டம். ஆத்திகராகிய ஞானியர் கருத்துப்படி அறியாமை. பெரியார் வாழ்க என்று கூவிக்கொண்டு பல சுயமரி யாதைக்காரர்கள் நெருப்புக் குண்டலத்தில் இறங்கிக் காண்பித்திருக்கிறார்கள். பொதுவாக இறைவன் பெயரால் உயிர்க் கொலை புரிதலும், மெய்வருத்து தலும் அறியாமையே என்பது இறைஞான முடையாரின் கருத்தாகும். 0 கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதன்

பொருள் விளக்கம் யாது? O காதலை அனுபவத்தில் கண்டவர்கள் அது இப்படி யிப்படி இருந்தது என்று மற்றவர்களுக்குச் சொல்லு வதில்லை. காதல் இன்பத்தை வருணித்து வருணித்துச் சொல்லுபவர்களோ எழுதுபவர்களோ அனுபவத்தில் கண்டதில்லை. ஏனெனில் அது கண்டவர்களால் சொல்ல முடியாத நுண்பொருள்; சொல்லுபவர்கள் அந்த துண் பொருளை அறியாதவர்களாகத்தான் இருக்கவேண்டும். (இந்தச்சொற்றொடர் கடவுளைப் பற்றியது; காதலைப் பற்றியதல்ல: மன்னிக்கவும்). 0 ஆசிரமங்களில் இருந்து தியானம் செய்து கொண்டிருப் பவர்களால் இந்த நாட்டுக்கு ஏதாவது பயன் உண்டா? O உண்டு, பிறப்பு விகிதத்தைக் குறைக்க அவர்கள் தம்

அளவிலாவது உதவியாக இருக்கிறார்களே!