பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன? ஏன்? எப்படி?

ஒரு நாத்திகர் இறைவனை மிக மட்டமாகத் தாக்கிப் பேசுகிறார். அது நல்லதா? நாத்திகர் என்ன? ஆத்திகர்களே பல சமயங்களில் இறைவனைக் கசந்து தாக்குகிறார்கள். கண்ணில்லாத வன் என்றும் மோசக்காரன் என்றும், கருணையற்றவன் என்றும் கல் என்றும் மனம் நொந்த ஆத்திகர்கள் பேசு கிறார்கள். அந்த ஆண்டவன் இத்தனை திட்டுக்களையும் வாங்கிக்கொண்ட பிறகும் புடம்போட்ட பொன்போல மிளிருகின்றான். போற்றுவார் தூற்றுவார் என்று பார்க் காமல் உலகை நடத்திக் கொண்டு செல்கின்றான்.

நாத்திகம் பரவினால் உலகம் அழிந்து விடும் என்று சொல்லுகிறார்களே! வேதங்களில் கடவுள் அப்படிச் சொல்லவில்லை. தீமை கள் மிகும் போதுதான் உலகத்தை அழிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். தெய்வச் சிலைகளுக்கு ஆபரணங்கள் பூட்டி அலங்ரிக்க கும் வழக்கம் இந்து மதத்தில் மட்டும் இருக்கக் காரணம் என்ன? மற்ற மதங்களில் கடவுளுக்கு உருவம் இல்லை என்ற கொள்கை இருக்கிறது. உருவம் இல்லாத கடவுளை அலங்கரிக்க முடியாது. இந்து மதம் ஒன்றில் தான் கடவுளுக்குப் பல உருவங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. இந்த உருவங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான உணவுகள் படைக்கப்படுகின்றன. ஒவ்வொரு விதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. வெறும் பச்சிலை, பூ, பழம், தேங்காய் பொங்கல், லட்டு, ஜிலேபி சுண்டல், வடை போன்றவற்றைச் சாப்பிடும் கடவுள் களும், சாராயம், பிராந்தி, ஆடு, கோழி, மீன், நண்டு' மனிதக் கறி சாப்பிடும் கடவுள்சளும் இந்து மதத்தில் இருப்பது போல, பல விதமான ஆடை, நகையணியும்