பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயம் 57

சாமிகளும் நிறைய இருக்கின்றன. மக்களின் இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த முயல்வார்களோ என்று எதிர்பார்த்தால், நமது மடத்துத் தம்பிரான்களோ? அவர்களே, காதில் வைரக் கடுக்கன்களும், கழுத்தில் தங்கப் பூண்பிடித்த உருத்திராட்ச மாலைகளும், நவரத்தின கண்டிகளும், கைவிரல்களில், ரத்தின மோதிரங்களும் அணிந்து டாலடிக்கிறார்கள். சங்கராச் சாரியார் போன்றவர்களோ, தெய்வங்களுக்கு வெள்ளி அங்கி பூட்டும் விழாக்களையும், வைர வேல் படைக்கும் விழாக்களையும் நகைகள் பூட்டும் விழாக்களையும் முன்னின்று நடத்தி வைக்கிறார்கள். வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் பிள்ளை விளையாட்டு என்று சுட்டிக் காட்டிய இந்தச் செயல்களை ஊக்கப் படுத்தி வளர்க்கவே நமது மதத்தலைவர்கள் முன்னிற் கிறார்கள்.

0 கடவுள் தான் படைத்த ஒவ்வொரு பொருளிலும் இருக் கிறார். அவரே அவற்றை உரிய வகையில் நடத்திச் செல்கிறார் என்று கதாகாலட்சேபம் செய்த ஒரு பெரியவர் கூறுகிறார். அப்படியானால், கொலை காரனையும், கொள்ளைக்காரனையும் அவர்தான் நடத்திச் செல்கிறாரா?

O இந்த மாதிரிக் கேள்விகளைக்கேட்பவர்கள் நாத்திகர்கள்.

நீங்கள் நாத்திகரா? மதங்கள் உண்மையிலேயே இறையுணர்வை வளர்க் கின்றனவா? - நானறிந்த வரையில் அவை போட்டியுணர்வையும், பொறாமையையும், போர் வெறியையும், எளிதில் ஆத்திரமடையும் மன வெறியையும் வளர்த்து வருவ தாகவே தோன்றுகிறது. மதவுணர்வு கடந்த ஞானியர் களே, இறையுணர்வை உண்மையில் வளர்த்து வந்ததாக அறிகிறோம்.