பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

என்ன? ஏன்? எப்படி?

தமிழில் அர்ச்சனை செய்வதை ஏன் எதிர்க்கிறார்கள்? கோயில்கள் தங்கள் வாழ்க்கை வசதிக்காகவே ஏற்பட்டவை என்று கருதியவர்கள் தமிழ் அர்ச்சனையை எதிர்க்கிறார்கள். தமிழ் அர்ச்சனை முறை நடை முறைக்கு வந்து விட்டால், கோயில்கள் எல்லாருக்கும் பொதுவாகி விடுமே என்ற அதிர்ச்சியில் அவர்ள்க அலறுகிறார்கள். தீர்க்க தரிசனம் என்றால் என்ன? அதை நம்பலாமா? முன்ன்றிவு என்று பொருள், காலப்போக்கைக் கணித்து எதிர்காலத்தில் இப்படியிப்படி நடக்கும் என்றுகூறுவதை தீர்க்க தரிசனம் என்று கூறுகிறார்கள். சொல்லும் காலத்தில் உள்ள சூழ்நிலை அதே போக்கில், தொடரு மானால் தீர்க்க தரிசனம் உண்மையாகி விடும். இடையில் ஏதாவது ஒர் மாறுதல் ஏற்பட்டு நடப்பு மாறி விட்டால் தீர்க்க தரிசனம் பொய்யாகி விடும். நோன்புகளைப் பற்றித் தங்கள் கருத்தென்ன? நோன்பின் சிறப்புப் பகுதி உண்ணாதிருத்தல் ஆகும். உண்ணாது நோன்பிருக்கும் ஒருவன், பட்டினியின் வன்மையை உணரும் நிலை உண்டாகிறது. பட்டினிக்கு ஆளாகித் தவிக்கும் எளியவர்களை அது எவ்வாறு வருத்தும் என்பதை நோன்பிருப்பவன் எண்ணிப் பார்த்தால் பொதுநலத் தொண்டு மனப்பான்மை உருவாக வேண்டும். பொதுநலத் தொண்டு இறை பணியாகும். இன்றைய நோன்புகள் இத்திசையில்

செல்லவில்லை; வெறும் பகட்டுகளாகவே இருக்கின்றன.

அரிசனங்கள் பூசாரிகள் ஆவதை ஆகமவிதிகள் ஏற்றுக் கொள்ளவில்லையா?

கந்தனும் நந்தனும் கடவுள் படைத்த பிள்ளைகளே. ஆகம விதிகள் நந்தனை ஏற்றுக் கொள்ளாவிட்டால்,