பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 59

கடவுள் ஆகம விதிகளை ஏற்றுக் கொள்ள மாட்டார். அன்புதான் கடவுளை அடையச் செய்யும்; ஆகம விதிகள் அன்பு வழியில் இருந்தால்தான் அவ்வாறு செய்ய இயலும். 0 ஆகம சாத்திரங்கள் தமிழ் அர்ச்சனையை ஏன் ஒப்புக்

கொள்ளவில்லை: இது ஒரு பித்தலாட்டப் பிரசாரம். ஆகம சாத்திரங்கள் இன்னின்ன முறையில் வழிபட வேண்டும். இன்னின்ன அர்ச்சனைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லு கின்றனவே தவிர இன்ன மொழியில் தான் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. - விஷ்ணு புராணம் படித்தேன். அதில் சிவபெருமானை மிக இழிவாக எழுதியிருக்கிறதே! -- சிவபுராணத்தில் விஷ்ணுவை இரண்டாந்தரமான ஒரு தேவனாகத்தான் காட்டப்பட்டிருக்கிறது. பிற சமயங் களைத் தாழ்த்திப் பேசுவதே, தங்கள் சமயங்களை உயர்த்தும் வழி என்று நினைத்த கருத்துக் குருடர்களால் எழுதப்பட்ட நூல்களே புராணங்கள். - டு மதங்களினால் வீண் கலவரங்களே ஏற்படுகின்றன,

மதங்களே இல்லாவிட்டால் எப்படியிருக்கும்? O உலகம் அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர் கள். அப்படியிருக்காது. அரசியல் கலகங்கள் நடக்கும். அதுவும் போய் விட்டால், சினிமா நடிகர்களுக்காக ரசிகர்கள் முட்டி மோதிக் கொள்ளுவர்கள். எப்படியோ கலகம் இருந்து கொண்டு தான் இருக்கும். ஏனென்றால் கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்குமாம்! 0 உலகில் உள்ள ஞானிகளெல்லாம் ஒரே கடவுள் சொள்கையைப் பேச நம் தமிழ் நாட்டுச் சமயவாதிகள் பல கடவுள்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்களே!