பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன? ஏன்? எப்படி?

நமது சமயங்களைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாத தால் ஏற்பட்ட கருத்து இது. வழக்கில் பல தெய்வ வணக்கம் இருப்பினும் சமய அறிஞர்கள் ஒரு கடவுள் கொள்கையுடையவர்களாகவே விளங்கியிருக்கிறார்கள். சைவப் பெரியோர்கள் சிவபெருமானே முழு முதற் கடவுள் என்று கூறுவதும், வைஷ்ணவர் திருமாலே தலைமைக் கடவுள் என்று கூறுவதும் ஒரே இறைவனைப் பற்றிய கருத்துக்களேயாம்.

கலிமுற்றிப்போய் விட்டது: உலகம் அழியப் போகிறது என்கிறார்களே!

மூடர்களைத் தயாரிக்கும் புத்தகங்களின் முன்னுரையே இந்தக் கருத்து. மூடத்தனம்தான் அழிந்து வருகிறது. நாள்தோறும் அறிவுத் தாமரைகள் பூத்துக் கொண்டிருக் கின்றன. உலகம் எழில் மயமாகிக் கொண்டு வருகிறது.

தெய்வத்திற்கு அஞ்சாதவன் தாய்க்கு அஞ்சுவானா? தெய்வத்திற்கோ தாய்க்கோ அஞ்சத் தேவையில்லை. தெய்வத்தின் அருளைப் பெறுவதற்கும் தாயின் அன்பை அடைவதற்கும் சில செயல்களைத்தான் நாம் அஞ்சாமல் செய்ய வேண்டியிருக்கும். அவர்கள் மனம் நோகும் செயல்களைச் செய்யப் பின்வாங்குவது அஞ்சுவ தாகாது: அறிவுடைமையாகும்.

இறைவனை நம்பலாமா?

வேளைக்கொரு கட்சிமாறும் அரசியல்வாதியை நம்புவதைவிட இறைவனை நம்பலாம். ஏனெனில் உலகில் பல மாற்றங்களையும் தோற்றங்களையும் ஆக்கும் இறைவன் என்றும் மாற்றமடைவதில்லை.