பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 6]

0

Ο

தெய்வ நம்பிக்கை எப்படியிருக்க வேண்டும்? நாம் மிகத் துன்பப்படும்போது எதிர்பாராத விதமாக ஓர் உதவி கிடைக்குமானால், அது தெய்வச் செயல் என்று நம்புவதில் தவறில்லை. அப்படியல்லாமல், கிடக்கின்ற கூழாங்கற்களையெல்லாம் பொறுக்கி அவற்றைத் தெய்வம் தங்கக் கட்டிகளாக மாற்றித் தந்தது என்று கதை சொன்னால், அது நம்பத்தகாத பொய்க்கற்பனையாகும்.

சிலுவைக் குழந்தை இரவில் பேசுகிறதாமே? ஆம். தன்னைப் பார்க்கவரும் கூட்டமெல்லாம் குறைந்த பிறகு, அந்தக் குழந்தை இறைவனுடன் தனியாகப் பேசுகிறதாம். இறைவா, ஒருவன் அறிஞனாவதற்கு நீண்டகாலம் ஆகிறது. ஒருவன் வளர்ந்து ஆளாகிப் பலநூல் கற்று, சிந்தித்து, ஐயந்தெளிந்து, அனுபவத்தில் முதிர்ந்து இறுதியில் அறிஞனாகிறான். ஆனால், ஓர் அதிசயக் குறியைப் பற்றிக் கேள்விப்பட்ட உடனே ஆயிரக்கணக்கானவர்கள் மூட நம்பிக்கையாளர்களாக மாறி விடுகிறார்களே. இப்படிப்பட்ட உலகில், இறைவா என்னையும் படைத்து, எனக்கொரு சிலுவைக் குறியும் கொடுத்தது ஏனோ இறைவா? என்று பேசு கிறதாம்!

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்று பாடியவர் யார்? ஏன் அப்படிப் பாடினார்?

ஒரு மத நம்பிக்கையுடையவர்கள் வேறு மத நம்பிக்கை யுடையவர்களைப் பழிக்கிறார்கள். தங்கள் மதத்தைக் காப்பாற்றுவதற்காகப் பிற மதங்களைப் பின்பற்றுபவர் களோடு மோதுகிறார்கள். இதனால் மதக் கலகங்கள் ஏற்படுகின்றன. இந்த வெறித்தனத்தையே பேய் என்று கூறி நல்ல கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கு இந்த