பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

என்ன? ஏன்? எப்படி?

வெறி பிடிக்காமல் இருக்க வேண்டும் என்று அருட் பெருஞ்சோதி வள்ளல் இராமலிங்க அடிகள் தம் திருவருட்பாவில் இவ்வாறு பாடியிருக்கிறார்.

பக்தி என்றால் என்ன? விளக்கம் தர முடியுமா?

பக்தி என்றால் இறையன்பு என்றுதான் சாதாரணமாகச் சொல்லுகிறார்கள்? ஆனால், பக்தர்களின் செயல் களைப் பார்க்கும்போது பக்தி என்றால் என்ன என்பது புரியவேயில்லை. லட்சம் ராமஜெயம் எழுதுவது பக்தி

என்கிறான் ஒருவன். பிளாட்பாரத்தில் பிள்ளையார்

கோயில் கட்டுவது பக்தி என்கிறான் இன்னொருவன் . திருப்பதியிலே பாம்பு வந்த கதை கூடப் பக்திதானாம்!

இந்துக் கோயில்களுக்குள் இந்துக்கள் அல்லாதார் நுழையச் கூடாது என்று சிலர் கூறுவன் தத்துவம் என்ன? இறைவன் ஒருவனல்ல; இந்துக்களுக்கு என்று இருக்கும் கடவுள் இந்து அல்லாதவர்களைத்தன் சன்னிதானத்தில் பார்க்க விரும்பவில்லை; அவன் வேறு இறைவனை வணங்குபவன், அவனுக்கு என் கோயிலில் என்ன வேலை? என்றெல்லாம் பக்தர் மூலமாகப் பகவான் கேட்கின்ற மாபெரும் மூடதத்துவம்தான் இது.

நரபலி எண்ணம் எப்படி உண்டாகிறது?

ஆட்டு பவியும், கோழிபவியும் கொடுக்கும் பக்தி முதிரும் போது நரபலியாக முடிகிறது. காட்டு விலங்காண்டித் தனத்துக்குப் பலியான மனிதர்களின் மூளை பின்நோக்கிச் செல்லுமே ஒழிய முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது.

கடவுள் எப்போது பிறப்பார்?