பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 6

Ο

3

உலகத்தில் பாவங்கள் அதிகரிக்கும்போது கடவுள் அவதாரம் எடுப்பார், பாவிகள் கையால் அவர் மரிப்பார். பிறகு அவர் பெயரால் ஒரு மதம் உண்டாகும். அந்த மதத்தைப் பரப்ப முனையும்போது, போராட்டங்கள், கலவரங்கள் உண்டாகும். பாவம் மறு பிறப்பெடுக்கும். இதுதான் உலக வரலாறு.

வடநாட்டில் இராம லீலா பண்டிகை நடத்தி

இாவணன் கொடும் பாவியை ஆண்டுதோறும்

கொளுத்துகிறார்களாமே? அது தான் அர்த்தமுள்ள இந்துமதம். நம் நாட்டில் மதச் சார்பற்ற அரசு ஆட்சி செலுத்துகிறது என்று நாம் நினைக்கிறோமே, அது அர்த்தமில்லாத நம்பிக்கை.

மதம் மாறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மதம் மாறுபவர்கள், இரண்டு வகையினர். ஒரு பெண்னைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ பொருள் கிடைக்கிறது என்பதற்காகவோ மதம் மாறு பவர்கள் வாழத் தெரிந்தவர்கள். ஒரு பெரிய புதிய தத்துவத்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கருதிக் கொண்டு வேறொரு மதத்திற்கு மாறுபவர்கள் அறிவில்லாதவர்கள். ஒரு மதத்தை விட மற்றொரு மதம் எந்த விதத்திலும் உயர்ந்த தன்று.

மணியம்மையார் ராமர் கொடும்பாவியைக் கொளுத்தப் போகிறாராமே?

ஆம் வடநாட்டில் ராமலீலா என்ற பெயரில் இராவணன் கொடும் பாவியைக் கொளுத்துகிறார்கள். இராவணன் சிறந்த தமிழ் மன்னன். அவன் கொடும்பாவியைக் கொளுத்துவதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் இராமன் கொடும்பாவியைக் கொளுத்துவோம் என்று