பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்

நம் நாட்டில் நீதி எப்படியிருக்கிறது?
சாதிக்கொரு நீதி; மதத்துக்கொரு நீதி, ஆணுக்கொரு நீதி; பெண்ணுக்கு ஒரு நீதி; மொழிக்கு ஒரு நீதி; என்று நீதி கூறுபட்டுக் கிடக்கின்றது. எல்லார்க்கும் ஒரே நீதி என்ற முறையில் நம் நாட்டுச் சட்டங்கள் அமையவில்லை. சட்டம் படித்தவர்கள் எது நியாயமான செயல், எது நியாயமற்ற செயல் என்று சொல்லமுடியாமல் இருக்கிறது. செய்யும் ஆளையும் இடத்தையும் பொறுத்துத்தான் ஒரு செயல் நியாயமானதா இல்லையா என்று தீர்மானிக்கப்படுகிறது.
இந்தியாவைக் காட்டிலும் சீனா உணவு உற்பத்தியில் மேலோங்கியிருக்கிறதாமே? உண்மையா?
உணவு உற்பத்தியில் மட்டுமன்றி மனித உற்பத்தியிலும் அது நம்மைவிட மேலோங்கி யிருப்பதால், சீனாவை இன்னும் வறுமை வாட்டிக் கொண்டிருக்கிறது. நாம் மனித எண்ணிக்கையைக் குறைக்க குடும்பக்கட்டுப்பாட்டை நம்புகிறோம்.சீனா போர்க்களத்தை நம்புகிறது
நம் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்!
நம் நாட்டில் அடிப்படைக்கல்வி சரியாக அமையவில்லை என்பதை இது காட்டுகிறது. சிறு வகுப்புகளிலேயே