பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

என்ன? ஏன்? எப்படி:

மணியம்மையார் இந்திராகாந்திக்கு எழுதினார்.இந்திரா காந்தி, இராவணனைக் கொளுத்தும் தீய வழக்கத்தை நிறுத்துவதாக உறுதி கூறாததால் மணியம்மையார் இராமன் கொடும்பாவியைக் கொளுத்த முடிவு செய்து விட்டார்.

தெய்வப் பணிக்கு கணக்கில்லாத பணம் கொடுக்கலாம்; கணக்கில் இல்லாத பணமும் கொடுக்கலாம் என்று வாரியார் பேசியிருக்கிறாரே வடலூர் வள்ளல் அருட்பெருஞ்சோதி இராமலிங்க அடிகள், தீயவர்கள் ஈட்டிய பணங் கிடைத்தால் அதைக் கிணற்றிலும் குளத்திலும் எறிந்து விடுவார். தீய பனங் களைத் தெய்வப் பணிக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது வள்ளலாரின் சித்தாந்தம். கிருபானந்த வாரியார், பேச்சிலேயே தூய்மையைக் காணமுடி. வில்லையே!

உடல் முழுவதும் வேல் குத்திக் கொண்டு தேரிழுப்பதும் அக்கினிக் குண்டத்தில்நடப்பதும் பக்தியின் சக்திதானே? பக்தியை வேடிக்கையாக்கிவிட்டவர்களின் செயல் இது, இறைவனிடம் கொள்ளும் அன்புதான் பக்தி என்றால்? இந்தத் துன்பங்கள் அன்புக்குச் சாட்சி யாகா.

சாயிபாபா கையை நீட்டியதும் விபூதிகொட்டுகிறதாமே, அங்கேதான் கோளாறு இருக்கிறது. கொட்ட வேண்டி யது விபூதியல்ல; அரிசி சாயிபாபா கையிலிருந்து அரிசி அல்லது கோதுமை கொட்டிக் கொண்டேயிருந்தால் குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலகங்களை மூடிவிடலாம்.