பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி, இலக்கியம்

0 பால் என்பதன் பொருள் என்ன?

O பால் என்பதன் பொருள் பகுதி என்பதாகும். உலக

உயிர்கள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஆண்பால், பெண்பால் என்பன. வடபால் தென்பால் என்பது வடக்கு தெற்கு ஆகிய பகுதிகளைக் குறிக்கும். குருதியினின்று உணவாகப் பிரிந்த பகுதி பால் ஆயிற்று. அப்பால் இப்பால் என்பது அப்பகுதி இப்பகுதி எனப் பொருள்படும். முப்பால் என்பது மூன்று பகுதிகளை யுடைய திருக்குறள் ஆகும்.

சலசல என்று ஓடுவதால் சலம் என்ற பெயரைப் பெற்றது நீர் என்று ஒர் ஆராய்ச்சியாளர் கூறுகிறாரே! கலகலவென்று உருளுவது கலம் என்றும் வளவள என்று உளறுவது வளம் என்றும் தளதள வென்று வளர்வது தளம் என்றும் சொன்னால் கற்றோர் நகைப்பர். ஆராய்ச்சி செய்வதற்கும் ஒரு வரைமுறை வேண்டும்.

காவியம் என்பது சரியா? பாவியம் என்பது சரியா? காவியம் என்பது வடசொல். அதற்குப் பதிலாக

உருவாக்கப்பட்டது பாவியம் என்பது. காப்பியம் என்ற

சொல் தமிழில் இருக்கும் போது காவியம் பாவியமாவது கோமாளிக் கூத்தாகும். . அ-5