பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

Ο

என்ன? ஏன்? எப்படி?

தமிழர் பாதுகாப்புப் பேரவை தேவையான அமைப்புத் தானா?

தமிழனுக்கு இன உணர்வும், மொழிப்பற்றும், ஏற்பட இந்த அமைப்பு இன்றியமையாதது. அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் தமிழ் உணர்வோடும் செயல்படும் தமிழர் பேரவை வெற்றி பெறுவது; தமிழினம் பெறும் வெற்றியாகும்.

என் பெயரைத் தமிழாக்கினால் சீதரன் என்று அமை கிறது. இதை நான் எப்படி விரும்ப முடியும்? சீதரன் என்பது ஒலியமைப்பை மாற்றுவதாகுமே தவிர தமிழ் ஆகாது. பூரீயை மார்பில் தரித்தவன் பூரீதரன். எனவே, திருமார்பன் என்று மொழி பெயர்த்துக் கொள்ளலாம். அழகான தமிழ்ப் பெயர் அல்லவா இது?

தனித்தமிழ் இயக்கம் இப்போது இருக்கிறதா? மறைமலையடிகளுக்குப் பிறகு பாவாணர் தாம், முழுத் தனித்தமிழ் உணர்வோடு செயலாற்றுகிறார். பாவாணரின் மாணவர்கள் அவர் சொன்னால் தான் ஒரு சொல்லைத் தமிழ்ச் சொல் என்று ஒப்புக் கொள்ளு கிறார்கள். இல்லா விட்டால் அது தமிழில்லை என்று வாதாடுகிறார்கள். கருத்துக்களுக்காகச் சொற்களா? சொற்களுக்காகக் கருத்துக்களா? தலைக்காகத் தொப்பியா? தொப்பிக்காகத் தலையா? நமது தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் வந்து கலப்பதால் தமிழ் வளர்ச்சியடையும் அல்லவா? ஒரு பாஷையில் மற்ற பாஷைகளிலுள்ள வார்த்தைகள் வந்து மிக்ஸ் ஆனால், அந்த பாஷை எப்படிக்