பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி, இலக்கியம் 67

குரோவாகும் என்பதற்கு இந்த வியாக்யானமே எக்சாம்பலாகும். ஆம்! தன் சுயரூபத்தையிழந்து கர்ண கடுரமாயிருக்கும் ஒர் அலங்கோல ரூபத்தை நாம் சகித்துக் கொள்ள நேரிடும்.

0 மக்கள் அறிவு மேம்பாட்டுக்குக் கடியநடை வேண்டுமா?

எளிய நடை வேண்டுமா?

O எளிய உணவு, எளிய உடை, எளிய நடை, எதிலும் எளிமையே வேண்டும். கடிய நடை அறிவை ஒரு சிலருக்கு மட்டுமே உரியதாக்கும். எளிய நடை அறிவை எல்லோருக்கும் உரியதாக்கும். எளிய நடை, என்பதற்காக கொச்சை நடையைப் பின்பற்றுவது தவறு; அது தூய மொழி நடையாகவும் இருக்க வேண்டும்.

0 வேதம் என்பதைத் தமிழில் மறை என்றார்கள், மறை

என்றால் மறைக்கப்பட்டது என்பது பொருளா?

O மறை என்றால் மறுக்கப்பட்டது என்று பொருள். அறுக்கப்பட்டது அறை என்றும், குறுக்கப்பட்டது குறை என்றும், நிறுக்கப்பட்டது நிறை என்றும் ஆவது போல மறுக்கப்பட்டது. மறை என்றாயிற்று. தொடக்க காலத் தில் மனிதன் இன்னின்ன குற்றங்களை அல்லது பாவங் களைச் செய்யக் கூடாது என்று மறுக்கப்பட்ட வரையறைகளையே கூறி வந்ததால் அது மறை என்றா யிற்று.

e கம்பர் தமிழ்ப் பற்றுள்ள தமிழரா?

O கம்பர் தமிழ்ப்பற்றுள்ளவர். தாம் எழுதும் காவியத்திற்கு இராமாயணக் கதையைப் பயன்படுத்திக் கொண்ட அவர் நல்ல தமிழில், தமிழ் மரபுக்கேற்பக் கதைப் போக்குகளை இயன்ற வரை மாற்றி எழுதியுள்ளார்.