பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

என்ன? ஏன்? எப்படி?

தனித் தமிழ்ப் பற்றுள்ள கம்பர், மாற்ற வியலாத பெயர்ச் சொற்களைக் கையாளும் போது இராமன், இலக்குவன், சீதை, தயரதன் என்று தமிழ் ஒலிமுறைப் படி மாற்றியமைத்துக் கொண்டு, எழுதிக் காட்டியிருக் கிறார்.

சில தமிழ்ச் சொற்கள் எளிதாக உச்சரிக்க வரமாட்டேன் என்கிறதே!

தாங்கள் ஒரு தமிழராக இருந்து கொண்டு இந்த கேள்வியைக் கேட்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது. அந்தோ அந்தோ பழைய நைந்த தமிழரொடு நான் இருந்தேனே என்று மயங்கித் தியங்க வைக்கிறது. காலையில் பல் துலக்கியதும் நாக்கு வழிக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். எந்தத் தமிழ்ச் சொல்லையும் எளிதில் உச்சரிக்கலாம். இது எங்கள் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் சொன்ன வழி.

ஒர் இசைக்குத் தகுந்தாற் போல் பாட்டு எழுதும் போது, இலக்கணம் பார்க்க வேண்டியதில்லையல்லவா? இசை தட்டாமல் வருவதற்குத் தான் இலக்கணம் பயன் படுகிறது. இலக்கணம் சரியில்லா விட்டால் இசைதட்டும். இசை சரியில்லா விட்டால், இலக்கணப் பிழையிருக்கிற தென்று பொருள். எனவே, இசைப் பாட்டிற்கும் இலக்கணம் தேவை! இசைப் பாட்டிற்குத் தான் அது இன்றியமையாத் தேவையாகும்.

ஒருவர் கருத்தை மற்றொருவர்க்குத் தெரிவிக்கப் பயன் படும் கருவியே மொழி. இந்த மொழி எதுவாயிருந்தால் என்ன? எப்படியிருந்தால் என்ன? தாய் மொழியென்றும் தனித்தமிழ் என்றும் பேசுவது மொழி வெறிதானே?