பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

என்ன? ஏன்? எப்படி?

கும்ப கருணன் போல் இருக்க வேண்டும்; வீடணன் போல் இருக்கக் கூடாது. அண்ணன் வாழ்வே தன் வாழ் வென்று கருதினான் கும்ப கருணன். அண்ணன் அழிவே தன் வாழ்வென்று பகைவனுக்குத் துணை நின்றான் வீடணன்; வீடணனுடைய பழிச் செயல், உலகுள்ளள

வும் துாற்றத்தக்க தீச்செயல் ஆகும். சிறு கதைகள் இலக்கியம் ஆகுமா? கொச்சைச் சொற்களும், விரசச் செயல்களும் இல்லாமல் குறிக்கோளோடு எழுதப்படும் சிறு கதைகளைச் சிறந்த இலக்கியமாகக் கொள்ளலாம்.

கோவலனுக்கு மிகச் சிறுவயதிலேயே திருமணமாகி விட்டதாமே?

ஆம். கோவலனுக்குத் திருமணத்தின்போது வயது பதினாறு. கண்ணகிக்கு அப்போது வயது பனிரண்டு. இவ்வாறுதான் சிலப்பதிகாரம் கூறுகிறது. இன்றைய சட்டப்படி அவர்களுடைய பெற்றோர் குற்றவாளிகள்.

பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில்புராணக்கதைகளும் பொருந்தாக் கூற்றுகளும் நிறைந்திருக்கின்றனவே? அது நம் அவப்பேறேயாகும். நம் முன்னோர்கள், பொருந்தாக் கூற்றுகளான புராணப் பொய் மூட்டை களைத் தெய்வீகம் என நம்பியதால் ஏற்பட்ட வினை இது. இனி புது இலக்கியங்கள் படைப்பவர்களாவது விழிப்போடு, பொய்மைக் கருத்துகளை விலக்கிப் படைக்க முன்வந்தால் நம் வருங்கால இலக்கியங்களா வது செம்மையாக அமையல்ாம். சிறந்த கவிதைக்கு பாவேந்தர் பாரதிதாசனை எடுத்துக் காட்டுவது போல், சிறந்த உரை நடைக்கு எடுத்துக் காட்டாக இருப்பது யார்?