பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி, இலக்கியம் ን1‛

Ο

O

Ο

மறைமலையடிகள்.

உங்களுக்கு யார் எழுதிய நூல் மிகப்பிடிக்கும்? ஏன்? டாக்டர் மு. வரதராசனாரின் நாவல்களும், பாரதி தாசனின் கவிதைகளும் சிறந்தவை. ஏனென்றால், அவை பண்புமிகுந்த ஒரு தமிழகத்தை உருவாக்குகின்ற கருவி களாக விளங்குகின்றன. மற்றவர்கள் புதுமை என்ற பெயரால் பல தீய கருத்துக்களைத் தங்கள் எழுத்துக் களில் ஏற்றிவிடுகிறார்கள்.

சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம் என்கிறார்கள். அதில் வரும் வில்லன் யார்? வில்லன் என்பது தமிழ்ச் சொல்லன்று. அதற்கு நேரான தமிழ்ச்சொல் கொடியோன் என்பதாகும். நாடகங்களில் வரும் கொடியோனை, தலைவனுக்கு தொடக்க முதல் இறுதிவரை கொடுமை செய்பவனாக அமைப்பது மரபு. சிலப்பதிகாரத்தில் அப்படியாரும் அமைக்கப்படவில்லை. கதையில் கொடியோனாகச் சிறுபங்கேற்றிருப்பவன் பொற்கொல்லனாவான். ஆனால், நாடகங்களில் வரும் கொடியோர்களின் முழுத்தகுதியும் பெற்றவனாக அப் பொற்கொல்லன் அமையவில்லை.

கண்ணதாசன் காப்பியடித்துத்தான் கவிதை எழுது கிறாரா? கண்ணதாசன் கவிதைகளைக் காப்பியெடுத்துக் கொண் டிருந்த ஒருவர் இப்பொழுது கவிஞராகி விட்டார். கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்ற பழ மொழி கண்ணதாசனைப் பொறுத்தவரை உண்மை யாகி விட்டது. கண்ணதாசன் இயற்கைக் கவிஞர்.