பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

என்ன? ஏன்? எப்படி?

மற்றொரு பத்திரிகையில் வெளியான கட்டுரையையோ செய்தியையோ எடுத்தாண்டு நன்றி என்று குறிப் பிட்டால் போதுமா? கட்டுரைகளையோ செய்திகளையோ அவற்றின் உரிமை யாளர்களின் ஒப்புதலின்றிப் போடக்கூடாது. அந்த ஒப்புதலைப் பணங்கொடுத்தும் வாங்கலாம்; கொடுக் காமலும் வாங்கலாம். அது உரிமையாளர்களின் விருப் பந்தைப் பொறுத்தது. ஒப்புதல் பெறாமல் நன்றி என்று போட்டாலும் அது தவறே.

சங்கப் பலகை என்றால் என்ன? மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஒரு பலகை வைத்திருந் தார்கள். அதைப் பொற்றாமரைக் குளத்தில் மிதக்க விட்டு, செய்யுள் நூலை அதன் மேல் வைத்தால், நல்ல நூலாக இருந்தால் தாங்கிக் கொள்ளுமாம்; தவறான நூலாக இருந்தால், நூலைத் தண்ணிருக்குள் தள்ளிவிடு மாம். அதைத்தான் சங்கப்பலகை என்கிறார்கள். இது வெறும் கட்டுக்கதை.

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவர், ஊழிற் பெருவலி யாவுள' என்றும் கூறுகிறாரே! ஊழில் பெருவலி யாவுள' என்று கேட்ட வள்ளுவர், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று பதிலளித்து விட்டார். எல்லாம் விதியென்று இருக்காமல் முயற்சி செய்பவன் அதற்குரிய பலனை அடைவது உறுதி!

சிலப்பதிகாரம் வஞ்சினமாலை இறுதியில் (41-49) கண்ணகி தன் இடப்புற மார்பைத் திருகி எறிந்ததும் எரிக் கடவுள் அவள் முன் தோன்றினான் என்று வருகிறது. இது விஞ்ஞான அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத் தக்கதா?