பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

என்ன? ஏன்? எப்படி?

மாணவர்கள், பொறுப்புணர்வும் நாட்டுணர்வும் உள்ள பவர்களாகப் பயிற்றப்பட்டிருந்தால், கல்லூரிக்கு வரும் போது, குட்டிச் சுவர்களில் முட்டிக்கொள்ள மாட்டார் கள்.
கதர் கட்டுபவர்கள் எல்லாரும் காந்தியவாதிகளா?
கதர் பலருக்குப் போர்வையாகவே பயன்படுகின்றது. காந்தீயவாதி என்ற பெயரில் அவர்கள் காந்தீயத்துக்கு மாறான பல செயல்களைச் செய்கிறார்கள். கதரணி பவர்களில் நூற்றுக்கு ஒருவர் இருவரே, உண்ணிமயான காந்தியக் கொள்கையுடையவர்களாக இருக்கிறார்கள்.
படித்துப் பட்டம் வாங்கிவிட்டுப் பலபேர் வேலையில்லாமல் அவதிப்படுகிறார்களே?
படிக்க வசதியில்லாமல் அவதிப்படுவோர்களைப் பற்றி எண்ணிப்பாருங்கள். படித்தவர்களுக்காவது வேலை வாய்ப்பை அணுகத் தகுதியிருக்கிறது. அதற்கும் தகுதி யில்லாமல் அவதிப்படுவோர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையே ஏற்படுவதற்கு வழியில்லாமல் இருக் கிறதே! இதற்கு நீங்களும் நானும் என்ன செய்யமுடியும்? ஆளவந்தவர்கள் தாம் திட்டமிட்டுச் செயல் ஆற்ற வேண்டும். காந்தியடிகள் எல்லாரும் பிழைப்பதற்குரிய ஒரு வழியைச் சொன்னார். ஆளவந்தவர்கள் அதை அலட்சியப்படுத்தியதால் இன்று இந்தியாவின் எதிர் காலம் இருண்டு காணப்படுகிறது.
இந்திராகாந்தி சங்கராச்சாரியைச் சந்தித்ததால் நாட்டுக்கு என்ன லாபம்?
பாரதப் பிரதமரே ஆச்சாரியாரை வந்து தரிசித்தார் என்று பெருமை பேசிக் கொள்வதைத் தவிர வேறு