பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

s

என்ன? ஏன்? எப்படி?

மறைமலையடிகளாருக்குப் பின் தனித் தமிழ் இயக் கத்தை வளர்த்து வரும் பெருந்தகையாளர். ஞா. தேவ நேயப்பாவாணர். அடக்கமும் அமைதியும் நிறைந்த இப்பெரியார் தமிழுக்குப் பகையென்றால் சீறும் புலியாக மாறும் உணர்ச்சி மலையாவார். இவர் அகர முதலி என்ற பெயரில் தொகுக்கும் நூலில் தமிழ் வேர்ச் சொற் களின் அமைப்பும் சிறப்பும் அறியலாம். இது தமிழுக்கு ஓர் அரு நிதியம் போன்ற நூலாகும். அனாதை என்பதன் சரியான பொருள் என்ன? ஆதி என்றால் முதல் என்று பொருள். அனாதி என்றாள் முதல் அற்றது என்று பொருள். முதல் அற்றவனான இறைவனையே அனாதி என்று குறிப்பிடுதல் வேண்டும். உலகவழக்கில் பெற்றோரை யிழந்தவர்களை அனாதை என்கிறார்கள். சொல்லுக்கேற்ற பொருள் என்ற முறை யில் பார்த்தால் இது சரியான வழக்கு ஆகாது. நாட்டுப் பாடல்கள் கவிதையாகுமா? திரைப்படப் பாடல்களையும், வசன கவிதைகளையும்

கவிதைகள் என்று ஒப்புக் கொள்வதற்காக நாட்டுப்

பாடல்களையும் கவிதைகள் என்ற தலைப்பில் சில பேராசிரியர்கள் கொண்டுவருகிறார்கள்.கவிதை எழுதத் தெரியாமலே கவிஞர் என்று பட்டம் சூட்டிக் கொள்ள விரும்புகிறவர்களின் முயற்சியில் நாட்டுப்பாடல்களுக் கும் கவிதை முலாம் பூசப்படுகிறது. தமிழ் எழுத்தாளர் சங்கம் நடக்கிறதா? இருக்கிறது. நடக்கிறதா என்பது தெரியவில்லை.

புதுக் கவிதைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? மேலும் பல புதுக் கவிதைகள் தோன்றி ஏற்கெனவே உள்ள புதுக் கவிதைகளை ஒழித்து விடும். மரபுக்கவிதை களே என்றும் இலக்கியமாகப் போற்றப்படும்.