பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி, இலக்கியம் 75

தமிழ் எழுத்தாளர்களுக்கு உரியமதிப்பு இந்த சமுதாயத் தில் கிடைக்க வில்லையே! வாசகர்களே கிடைக்கவில்லை. அதற்குப் பிறகல்லவா மதிப்பைப் பற்றி ஆராயவேண்டும்.

தமிழில் திறனாய்வுக் கலை சரியாக வளரவில்லையே! ஆண்டாண்டு காலமாக நமது புலவர்கள், பழங்கதை களின் தவறுகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக தத்துவ விளக்கங்கள் கூறிக்கொண்டு வந்தார்கள். இப்போது திறனாய்வு செய்யப் புகுபவர்கள் தவறு கண்டுபிடிப்பதே தங்கள் பணியென்று நினைக்கிறார்கள். முன்ன வர்கள் மறுக்கப்பயந்தார்கள்; பின்னவர்கள் பாராட்டத் தயங்குகிறார்கள். இதனால் திறனாய்வுக்கலை சரியாக வளரவில்லை.

உணர்ச்சியில் வெளிப்படும் கவிதைக்கு இலக்கண வரம்பு தேவையா?

உணர்ச்சி, அழுகையாகலாம்; சிரிப்பாகலாம்; கூப்பாடா கலாம்; வெறியாகலாம்; கவியாக முடியாது. இலக்கண வரம்புடைய மொழியே சிறந்த மொழியாகும். இலக்கண வரம்புடைய கவிதையே சிறந்த கவியாகும். தமிழின் பெருமையைப் பாடும் பரஞ்சோதியார், மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ என்கிறார். தன் கணவனை மாதவி பறித்துக் கொண்டபோது சீற்றம் அடையாத கண்ணகி அவன் உயிரைப் பாண்டி யன் பறித்த போது சீறியது ஏன்? மாதவியிடம் சென்றது கோவலனுடைய குற்றம்.குற்றம் உணர்ந்த பின் அவன் திரும்பிவர வாய்ப்பிருந்தது.