பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

என்ன? ஏன்? எப்படி?

கொலைப் பட்டது கோவலனின் குற்றமன்று; அது பாண்டியன் செய்த குற்றம்.உணர்ந்தாலும் திருப்பித்தர முடியாத குற்றத்தைப் பாண்டியன் செய்துவிட்டான். கோவலன் மீது குற்றம் இருந்து கொல்லப் பட்டி ருந்தால் கண்ணகி சீற்றம் அடைந்திருக்க மாட்டாள். கண்ணகியிடமிருந்து மாதவி அவனைப் பிரித்தபோது கோவலன் குற்றவாளியாயிருந்தான். அவன் உயிரைப் பாண்டியன் பிரித்தபோது கோவலன் குற்றவாளியல்லன்.

புதுக் கவிதைகளைப் பற்றித் தங்கள் கருத்தென்ன? புது மட்டும் போதாது; கவிதையும் வேண்டும். இது கவிதையா என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கும் எதுவும் கவிதையாகாது. இதுதான் கவிதை என்ற எண்ணத்தையுண்டாக்குவதே கவிதையாகும். புதுக் கவிதை பழங்கவிதை என்று பேசுவதெல்லாம் பித்த லாட்டம்!

கண்ணதாசன் தன்னைக் கவிச்சக்கரவர்த்தி என்று சொல்லிக் கொள்கிறாரே! கண்ணதாசன் தன்னைக் கண்ணதாசன் என்று மட்டுமே சொல்லிக் கொள்கிறார். கவியரசர் என்றும், கவிச்சக்ர வர்த்தி என்றும் அவருடைய கவிதை ரசிகர்களே அவரைப் போற்றிப் பாராட்டுகிறார்கள்.

திருக்குறளில் பல பிழைகள் இருக்கிறதாமே? பல அரை குறைகள் இப்போது கவிஞர்களாகக் கிளம்பி யிருக்கின்றனர். தங்கள் தவறுகளுக்குச் சமாதானம் சொல்லச் சான்றோர்களும் பிழையாக எழுதினார்கள் என்று கூறத் தொடங்கி விட்டனர். திருக்குறளில் குறை யும் இல்லை; கறையும் இல்லை; நன்கு கற்றவர்கள் அதில் நிறைவையே காணுகின்றனர்.