பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி, இலக்கியம் 77

Ο

சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்பது எவ்வாறு பொருந்தும்?

தெய்வங்களையும் மன்னர்களையுமே காப்பியத் தலைவர்களாகப் பாடி வந்த மரபிலிருந்து மாறுபட்டு, சாதாரணமான குடிமகளாகிய கண்ணகியைத் தலைவி யாகப் பெற்று விளங்குவதால், அறிஞர்கள், இதனைக் குடிமக்கள் காப்பியம் என்று குறிப்பிடுகின்றனர்.

கவிஞர் சுரதா, கவிஞர் கண்ணதாசன் இருவரில் சிறந்த கவிஞர் யார்? -

இருவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கில்லை. ஏனெனில்

கண்ணதாசன் மிக மிக எளிமையான சொற்களைக்

கொண்டு தன் கவிதைகளை மன அரங்கில் ஏற்றுகின்றார். சுரதா, பொருள் பொதிந்த உவமைகளால் மனதைக் கவருகிறார். ஒவ்வொருவருடைய சிறப்பும் தனிப் போக்குடையது. தவறான கருத்துக்களையும், ஆபாச மான கருத்துக்களையும் வெளியிடாமல் இருப்பார்களே யானால், இருவரும் முழுப் பாராட்டுக்கும் உரிய சிறப்பினை அடைவார்கள்.

இரக்க மொன்றில்லா அரக்கன் என்று இராவணனைக் கம்பன் பாடுகிறான். இரக்கமில்லாமல் அவன் செய்த செயல்கள் யாவை? .

வேலைக்காரியான ஒரு முதியவளின் கூனில் களிமண் உண்டையால் அடித்தது, உயிர்க்கொலை வேள்வியைத் தடுக்க வந்த தாடகையை வதைத்தது: வாலியை ஒளித் திருந்து கொன்றது. சூர்ப்பனகையை மூக்கு முலை யறுத்தது இப்படிப் பட்டியல் போடும் படியாக இராமன் செயல்களே காணப்படுகின்றன, சீதையைத் தூக்கிக் கொண்டு போய்ச் சிறை வைத்த போதும் காவலுக்குப் பெண்களையே வைத்த பெருந்தன்மையைத் தான்