பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

என்ன? ஏன்? எப்படி?

இராவணன்பால் காண முடிகிறது. இராமாயணத்தைத் தெளிந்த சிந்தையோடு படித்தால், இளமை முதலே இரக்கமற்றவனாக வளர்ந்தவன் இராமன் என்பதே பெறப்படுகிறது.

தமிழ்வாணனைப் பற்றிச் சில வரிகள். தமிழ்வாணன் ஜோசியப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவற்றைப் படிப்பவர்கள் சோதிடர்களிடம் போய்க் காசு கொடுத்து ஏமாறுவதில்லை. தங்களுக்குத் தாங்களே பலன் பார்த்துக் கொள்கிறார்கள். பலன்க்ள் சரியாக நிறைவேறாததைக் கண்டு சோதிடத்தில் நம்பிக்கையிழக்கிறார்கள். இதுவும் ஒரு வகையான அறிவுப் பிரசாரமே! மதுரைப் பல்கலைக் கழகத்தில் புதுத்தமிழ் இலக்கியத்துத் கும் இடம் அளித்திருக்கிறார்களே! பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே. இந்தச் சூத்திரம் எல்லாப் புதுமை களுக்கும் ஏற்றத் தாழ்வின்றி அமைதி கூறிக் கொண்டு நிற்கிறது. j

சிற்றிலக்கியங்களில் குறிப்பிடத்தக்கது எது? மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்: கலிங்கத்துப்பரணி.

நூலகங்களில் உள்ள சில நூல்களை ஆண்டுக் கணக்காக யாருமே தொட்டுப் பார்ப்பதில்லையாமே? அறிவுச் செல்வத்தை வாரி வழங்க அவை பொறுமை யோடு காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளாதது வாசகர்களின் குற்றமேயொழிய அவற்றின் குற்றமன்று.

வள்ளுவர் ஒருவர் தானா? அவரால் எப்படி இத்தனை கருத்துக்களைக் கூற முடிந்தது?