பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி, இலக்கியம் 79

Ο

நமது அரசியல் வாதிகள் வள்ளுவரை விட மிகுதியன் கருத்துக்களைக் கூறுகிறார்கள். ஆனால் அ ைவ முன்னுக்குப் பின் முரணாகவும், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாகவும் இருக்கின்றன. வள்ளுவர் சீராகச் சிந்தித்து நேரான வழியை நமக்குக் காட்டி யருளியிருக்கிறார்.

நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம். இதன் பொருள் என்ன? உயிர் வாழ்வதற்குத் துணையாக இருப்பன உணவும் நீரும் என்பதை நாமறிவோம். ஆனால், உண்மையில் அவை மட்டும் இருந்தால் நாம் உயிர் வாழ முடியாது. அவற்றை எல்லாருக்கும் ஒழுங்காகக் கிடைக்கச் செய்யும் ஆட்சியினால் தான் நாம் வாழமுடியும். ஆகவே, உலகம் மன்னனால்தான் உயிர் வாழ்கிறது என்பது பொருள்.

திருவள்ளுவரைக் காட்டிலும் சிறந்த ஒருவரைக் குறிப்பிடுவீர்களா? -

உலகப் பொதுமறை இயற்றிய வள்ளுவருக்கு இணை யானவர் ஒருவரே காணக் கிடையாத போது, உயர்ந்தவர் யாரென்று சொல்ல முடியும்?

ஒரு மனிதன் ஏழு பிறப்புப் பிறக்கிறான் என்று சொல் கிறார்கள். ஏழு பிறப்பிலும் எப்படி எப்படிப் பிறக்கிறான். புல்லாகிப் பூண்டாய்ப் பல் மிருகமாகி எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான் என்பது திருவாசகம். இது மாணிக்கவாசகர் காலத்து வழங்கி வந்த கற்பனை. நம் காலத்துக் கற்பனைக்குப் பெயர் டார்வின் சித்தாந்தம் என்பது.