பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

என்ன? ஏன்? எப்படி?

எதுகை மோனையில்லாமல் கவிதை பாடலாமா? பாடலாம். ஆனால் அது ஏட்டில் இருக்குமே தவிர இதயத்தில் ஏறாது. எதுகை மோனையோடு ஒழுங்குற அமைந்த கவிதை படித்த நெஞ்சில் ஏறிப் படியும். ஒழுங்கற்ற கவிதை நெட்டுருப் போட்டாலும் நினைவில் தங்காது. திருவள்ளுவர் பல தவறான கருத்துக்களைக் கூறியிருக் கிறாராமே! சரியான நிலையில் உள்ளவன் கண்ணுக்கு ஒரு விளக்குத் தெரியும். போதை நிலையில் உள்ளவன் கண்ணுக்கு ஒரு விளக்கு இரண்டாகத் தெரியும். அந்த இரண்டில் எது உண்மையான விளக்கு என்று தெரியாது. சரியான மன நிலையில் உள்ளவர்களுக்கு திருக்குறள் அறநூலாகவே இருக்கின்றது. கம்பர் ஏன் இராமாயணக் கதையை மாற்றினார்?

தீயவனும் சூழ்ச்சிக்காரனுமாகிய இராமன் பகையை அழித்தவன் என்ற ஒரே காரணத்துக்காக வடக்கில் இருந்தவர்கள் அவனைத் தெய்வமாகக் கொண்டவர்கள். அதனால் வால்மீகி இராமாயணம் அங்கே செல்லு படியாயிற்று. நல்ல பண்புகள் இல்லாதவனைத் தமிழர் கள், மனிதனாகவே மதிக்கமாட்டார்கள். அவர்கள் மதிக்க வேண்டுமானால், இராமனைப் பண்புநலம் மிக்கவனாகக் காட்டியாக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கம்பர் இராமாயணக் கதையை மாற்றி எழுதினார்.

குழப்பமான கருத்துக்களை வெளியிடும் எழுத்தாளர் களைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? ஒடிக் கொண்டிருக்கும் சாக்கடை நீர் தானும் தெளியாது; தேங்கியுள்ள தெளிந்த நீரைக் கலக்காமலும் போகாது