பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

வாழககை

பெண்களைப் பார்ப்பது கண்களின் குற்றமா? பெண் களின் குற்றமா? இரண்டும் இல்லை. அது பருவத்தின் குற்றம்.

கற்பைப்பற்றி பெரியார் என்ன சொல்கிறார்? இருக்கின்ற மூடநம்பிக்கைகளிலெல்லாம் இது பெரிய மூட நம்பிக்கை என்று சொல்லுகிறார் பெரியார். ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுக்க எண்ணுகிற கயவன் அவள் கற்பைக் கெடுத்தால் போதும் என்று நினைக் கின்றான். தான் விரும்பா விட்டாலும்; ஒருவன் தன்னைத் தீண்டி விட்டால் தன் கற்புப் போய்விட்டது என்று நினைக்கின்ற பெண் தன் வாழ்வை முடித்துக் கொள்கிறாள். இக்கற்புக் கொள்கை பெண்களை மீளாத அடிமைத் தனத்தில் ஆழ்த்திவைத்திருக்கிறது என்கிறார் பெரியார்.

தெரிந்துகொண்டே தவறு செய்பவர்களைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? அறிஞர்கள்! தவறு செய்யப் பயப்படுபவர்களை உலகத் தில் பிழைக்க தெரியாதவன்; முட்டாள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். அதனால் பிழைக்கத் தெரிந்தவர்கள் அறிஞர்கள் தாமே? அ-6