பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

s

என்ன? ஏன்? எப்படி?

உலகில் ஏழைகளே யில்லாமல் இருந்தால் எப்படி யிருக்கும்?

நாத்திகம் தழைத்தோங்கும். காதலைப் பொழுது போக்காக நினைக்கும் ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாகரிக உணர்வு பெறாத காட்டுமிராண்டிகள்! சமுதாய உணர்வற்ற சனாதனிகள்! பிறர் வயிற்றெரிச்சலை உணராத கொள்ளை வணிகர்கள்! மக்கள் துயர் உணராத ஆள்வோர்கள்! இந்த வரிசையில் சேர்ந்தவர் களே பொழுதுபோக்குக் காதல் மன்னர்கள்!

வெற்றிக்கு வழி என்ன? பல தோல்விகளைச் சந்தித்தாலும் ’மனம் தளராமல் மேலும் முயலுவதே வெற்றிக்கு வழியாகும். காலத்தை யும் சூழ்நிலையையும் கணக்கிட்டுக் செய்யும் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும். பழிக்கத்தக்க செயலை ஒருவன் செய்துவிட்டால் அவனை யாராவது போற்றுவார்களா? ஏன் போற்றமாட்டார்கள். குளிக்கும் பெண்களுடைய சேலைகளைத் துரக்கிக் கொண்டு போய் மரத்தில்

உட்கார்ந்து கொண்டவனை நம் பாரத மக்கள்

கடவுளாகப் போற்றுகிறார்களே, கோபிகள் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய ஆடைகளைச் சுருட்டிக்கொண்டுபோய் மரக்கிளையில் உட்கார்ந்து கொண்ட கண்ணனைக் கண்கண்டதெய்வமாக அல்லவா போற்றுகிறார்கள்.

அன்பின் அடையாளம் என்ன? ஒரு முழம் மல்லிகைப் பூவிலிருந்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவை வரை அன்பின் அடையாள