பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 83

s

மாகப் பல பொருள்கள் உள்ளன. அடையாளம் காட்டத் தெரியாத அன்பும் உண்டு. படித்த பெண்ணுக்கும் படிக்காத பெண்ணுக்கும் உள்ள வேற்றுமை என்ன? படிக்காத பெண், தன் அனுபவத்தை வைத்துக் கொண்டு முறையாகச் சமையல் செய்கிறாள். படித்த பெண் பத்திரிகைகளிலும் வானொலியிலும் கூறப்படும், சமையல் முறைகளைப் பின்பற்றி எவ்வாறோ சமையல் செய்கிறாள். கேள்வியறிவு உருவத்தைத் தருகிறது. அனுபவ அறிவு சுவையைத் தருகிறது. அடக்கம் இல்லாத பெண்களால் பெற்றோர்க்குத் தொல்லைதானே? அடக்கம் இல்லாத ஆண்களால் ஏற்படும் தொல்லையை விடவா? அடக்கம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண் களுக்கும் தேவைதான்!

பெண் பெண்ணாக வாழ என்ன செய்ய வேண்டும்? பாவடை, கவுன், புடவை, சோளி எனப் பெண்களுக்கு என்று ஏற்பட்ட ஆடைகளை மாத்திரம் அணிய வேண்டும்; கால் சட்டை, குழாய், கோட்டு, சட்டை போன்ற ஆடைகளை அணியக்கூடாது.

நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்-இச் சொற் றொடரைக் கூறியவர் யார்? இதன் பொருள் என்ன? பாவேந்தர் பாரதிதாசன் தம் குடும்பவிளக்கு முன்னுரை யில் இச்சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். இது இப்போது ஒர் பழமொழிபோல் வழங்கப் படுகிறது. பல்கலைக் கழகம் எவ்வாறு அறிவுக்களமாக விளங்கு கிறதோ, அவ்வாறே ஒரு சிறந்த குடும்பமும் நல்ல அறிவு நிலையமாக விளங்குகிறது என்பது இதன் பொருள்,