பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

3

இலாபமில்லை, அந்த நேரத்தில் நான்கு கோப்புகளைப் பார்த்திருந்தால், நாட்டை வருத்தும் நான்கு பிரச் சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டிருக்கும்.
கடத்தல் காரனுக்கும் சுரண்டல் காரனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்ன?
கடத்தல்காரன் முழுசு முழுசாகக் கடத்துகிறான். சுரண்டல்காரன் சிறிது சிறிதாகச் சுரண்டுகிறான். கடத்தல்காரன் சட்டத்தின் காவலர்களை அணைத்துக் கொள்கிறான். சுரண்டல்காரன் சட்டத்தையே அணைத்துக் கொள்கிறான், கடத்தல்காரனை ஒரு நாள் சட்டம் பிடித்துவிடுகிறது. சுரண்டல் காரனைச் சட்டம் என்றும் பிடிப்பதேயில்லை.
இலஞ்சம் வாங்கும் பழக்கத்தை ஒழிக்க முடியாதா?
இன்றைய சமுதாயச் சூழலில் இலஞ்சத்தை ஒழிக்க முடியாது. இலஞ்சம் வாங்குபவன் அது 'தன் பிறப்புரிமை என்று கருதுகிறான். கொடுப்பவன் கடிக்க வரும் நாய்க்கு ஓர் எலும்புத் துண்டைப்போடு என்று இலஞ்சம் கொடுக்கிறான். தனியுடைமையை ஒழித்து எல்லாத் தொழில்களையும் அரசுடைமையாக்கி விட்டால் இலஞ்சம் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துவிடும்.
இந்திரா காந்தி தன் ஆட்சிக் காலத்தில் செய்த மிகப் பெரிய சாதனை எது?
வங்காள நாட்டை உருவாக்கியது. இந்தியாவும் அணு குண்டு செய்யமுடியும் என்று காட்டியது.
பீகாரில் வன்முறையும் உயிர்ப்பலியும் நடந்திருக்கிறதே?
இன்றைய பாரதத்தில் யார் கிளர்ச்சி நடத்தினாலும் வன்முறை தலைகாட்டாமல் இருக்கப்போவதில்லை.